உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அண்ணன் அரசுக்கு எதிராக போராட்டம்: ஷர்மிளாவை கைது செய்த போலீசார்: ஆந்திராவில் பரபரப்பு

அண்ணன் அரசுக்கு எதிராக போராட்டம்: ஷர்மிளாவை கைது செய்த போலீசார்: ஆந்திராவில் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திரா தலைமை செயலகத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட, அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் 40 பேரை விஜயவாடாவில் போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, ஆந்திரா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஷர்மிளா நியமனம் செய்யப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u06asxo8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முற்றுகைப் போராட்டம்

இந்நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்தை ஷர்மிளா அறிவித்தார். அதன்படி, ஆந்திரா தலைமை செயலகத்தை நோக்கி இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட, ஒய்.எஸ்.ஷர்மிளா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் 40 பேரை விஜயவாடாவில் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ஷர்மிளாவின் போராட்டத்தைத் தடுக்க அவரை வீட்டுக் காவலில் வைக்க ஜெகன் மோகன் ரெட்டி அரசு முயற்சி செய்தது. ஷர்மிளாவின் வீட்டுக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் நேற்று ஷர்மிளா வீட்டுக்கே போகவில்லை. காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே தூங்கினார். இந்த வீடியோ காட்சிகள் இன்று காலை இணையதளத்தில் வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramesh Sargam
பிப் 23, 2024 06:33

நாளை தமிழகத்தில் அப்பா ஆட்சியில், மகன் இப்படி கைது செய்யப்படலாம்... பொறுத்திருந்து பாருங்கள். இப்பவே மகனின் படம் பெரியதாக திமுக விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். அப்பாவுக்கு மகனின் செயல் - துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், ஒரு பரிதாப நிலை.


தாமரை மலர்கிறது
பிப் 23, 2024 02:13

உங்க அண்ணன் தங்கை டிராமா பாசமலர் சிவாஜியை தோற்கடிச்சிடும் போலிருக்கே.


mrsethuraman
பிப் 22, 2024 21:47

அண்ணன் என்னடா தம்பி (தங்கை) என்னடா அவசரமான உலகத்திலே.


ராஜா
பிப் 22, 2024 21:03

பிறர்க்கின்னா முற்பகல் செயியின் தனக்கின்னா பிற்பகல் தானே வரும். ராகுல், பிரியங்கா சண்டையும் சூடு பிடித்து இருக்கிறது.


sankaranarayanan
பிப் 22, 2024 20:31

ஒரு குடும்பத்தையே சின்ன பின்னமாக்கி தனது குடும்பம் மட்டும் உடையாயாமல் பிரியாமல் வைத்திறுக்கும் இத்தாலி இறக்குமதி சோனியாவின் அடக்குமுறைதான் இப்போது உச்சமாக இருக்கிறது நாட்டை பிரித்து ஆண்டதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் வீட்டைபிரித்த கட்சி என்ற கெட்டபெயரை சோனியா காந்தி கட்சி பெற்றுவிட்டது இனி அடுத்தது கணவன் மனையைப்பிரிக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கும்


Kuppan
பிப் 22, 2024 18:06

இந்த தெலுங்கு தமிழகத்தில் செய்த நாடகத்தின் வேறு பட்ட version இப்ப அவங்க மாநிலத்திலே அரங்கேறுகிறது.


Nagendran,Erode
பிப் 22, 2024 17:49

ஒரே ஜாலியா இருக்கும்.????


DVRR
பிப் 22, 2024 16:33

நான் பிரதமந்திரி அல்லது ஜனாதிபதியாக இருந்தால் இந்த எளிமையான சட்டத்தை கொண்டு வந்திருப்பேன். ஒருவர் நாட்டின் பிரதமர், முதல் மந்திரி அல்லது மந்திரியாக ஆகும் பட்சத்தில் அவர்கள் ரத்த சொந்தங்கள் அடுத்த 20 வருடத்திற்கு எந்த அரசியல் பதவியும் கொடுக்கக்கூடாது. இந்த மூன்று பதவிகளும் பெற்றவர்கள் அடுத்த ஒரு முறை மட்டுமே எம் எல் ஏ தேர்தலுக்கு நிற்க முடியும் அப்படி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பிறகு எந்த ஒரு தேர்தலிலும் நிக்க முடியாது .


அருண் குமார்
பிப் 22, 2024 17:48

பிரதமராக வாழ்த்துக்கள்..


vbs manian
பிப் 22, 2024 16:01

குடும்பத்தை பிளவுபடுத்தி அரசியல் செய்வதில் காங்கிரஸ் பலே கில்லாடி.


SANKAR
பிப் 22, 2024 19:21

same done by BJP in maharashtra.you forgot?


rama adhavan
பிப் 22, 2024 20:28

கவலை வேண்டாம். விரைவில் தன் வினை தன்னை சுடும். பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் என்னும் குறளும் உண்மை ஆகும்.


Barakat Ali
பிப் 22, 2024 15:33

வேறு யாரும் போட்டிக்கு வந்துவிடக் கூடாது ........ நாங்களே அரசாள வேண்டும் ...........


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி