உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தரமான கல்வி கிடைக்க செய்வதே அரசின் தலையாய கடமை: சொல்கிறார் ராகுல்

தரமான கல்வி கிடைக்க செய்வதே அரசின் தலையாய கடமை: சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' தனது மக்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் தலையாய கடமை, '' என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை, சென்னை ஐஐடி மாணவர்கள் சந்தித்தனர். அப்போது, கல்வி, திறன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்களுடன் ராகுல் கலந்துரையாடினார். அப்போது திறமை என்பதற்கான வரையறை குறித்து ராகுல் அளித்த விளக்கம்: ஒருவர் தன்னை சுற்றி நடப்பதையும், தன்னைச்சுற்றி உள்ள சூழ்ச்சிகளை துல்லியமாக கவனிப்பதையே திறமை என நான் கருதுகிறேன். பயம், பேராசை மற்றும் கோபத்தை கையாள்வது இதில் அடங்கும் என்றார்.தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தனது மக்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் தலையாய கடமை என நான் நம்புகிறேன். இதனை தனியார் மயம் மூலம் அல்லது நிதியுதவி மூலம் செய்ய முடியாது. கல்விக்கும், அரசு அமைப்புகளை வலிமைப்படுத்துவதற்கும் நாம் நிறைய செலவு செய்ய வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Narasimhan
ஜன 05, 2025 11:24

கல்விக்கும் இவனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அறிவுரை கொடுக்க வந்துட்டான்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 05, 2025 10:11

புதுதில்லி ன்னு போட்டிருக்கு ...... சென்னை ஐஐடி ன்னும் போட்டிருக்கு ..... தாய்லாந்து சுகபோகி எந்த ஐஐடி ல நுழைஞ்சாரு ????


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 05, 2025 08:55

நீங்க மற்றவர்களுக்கு கொடுக்கும் அறிவுரையை நீங்களே பின்பற்றுவதில்லையே இளவரசே ???? சரி ..... பரவால்ல ..... ஐ ஐ டி தரத்துக்குப் பெயர் பெற்றது ..... உங்களால் கொஞ்சம் எண்டர்டெயின்மெண்ட் கிடைச்சுது ......


அப்பாவி
ஜன 05, 2025 07:32

ஒரு டீ யாவது வித்திருக்கியா நீ?


vijay
ஜன 05, 2025 22:15

கரெக்ட்டுதான். டீ வித்து, கட்சி, தேச நலன் சார்ந்த இயக்கங்களில் சேர்ந்து மக்களை சந்தித்து, உதவி செஞ்சு, உழைத்து தன்னையும் செதுக்கி வளர்த்துக் கொண்டு, தான் சார்ந்த கட்சியையும் வளர்த்து, நாட்டின் பிரதமரா ஆகி இப்போ இந்தியா என்றால் கொஞ்சமாவது கெத்தா இருக்கு, நாடும் வலிமையா மாறிக்கிட்டு இருக்கு. நாட்டை குட்டிச்சுவராக்கிய ஒரு குடும்பத்தின் வாரிசாக மட்டும் அடையாளத்தை வைத்து அரசியலுக்குள் வந்து வேற்று நாட்டு டீப்-ஸ்டேட் நபர்களுடன் கூட்டு சேர்ந்து நாட்டை நிர்மூலமாக்கியாவது தான் பதவிக்கு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களைவிட டீ விற்று உழைத்து வாழ்ந்து நாட்டை வழிநடத்தும் தலைவர் இப்போது இருப்பது சிறப்பு.


அப்பாவி
ஜன 05, 2025 07:32

ஊருக்கு ஒரு ஐ.ஐ.டி. கிராமத்துக்கு ஒரு எய்ம்ஸ். திட்டமெல்லாம் வெச்சிருக்கோம் ஹை.


Dharmavaan
ஜன 05, 2025 06:09

இது பற்றி பேச ராகுல்கான் என்ன மேதையா பப்பு வுக்கு முதிர்ச்சி இல்லை


தாமரை மலர்கிறது
ஜன 05, 2025 01:33

இந்தியாவில் கிடைக்கும் தரமான கல்வி அமெரிக்காவில் கூட கிடையாது என்று பப்புக்கு தெரியாது.


Bye Pass
ஜன 05, 2025 00:34

காமராஜர் காலத்தில் அரசாங்கம் பள்ளிகளை திறந்து படிப்பறிவை வளர்த்தது .. சமூக விரோதிகள் நகருக்கு வெளியே சாராயம் விற்பனை செய்வார்கள் …கருணாநிதி காலத்திலிருந்து அரசாங்கம் சாராயக்கடை நடத்துவதில் கவனம் …அரசியல்வாதிகள் கல்வி கூடம் நடத்துகிறார்கள்


Balaji
ஜன 05, 2025 00:16

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும் ஷாமியோவ் நீங்க என்ன படிச்சதினால இப்படி ஒரு உல்லாசமான வாழ்வு கிடைத்தது? உங்கள் வாழ்விற்கும் படிப்பிற்கும் சம்பந்தம் உண்டா? இல்லையெனில் மக்களுக்கு ஏன் உண்மையை சொல்லாமல் தவறாக வழி நடத்துகிறீர்கள்? நீங்கள் எந்த அரசு பள்ளியில் படித்தீர்கள்? அல்லது தனியார் பள்ளியில் படித்தீர்களா? சாரி, படித்தீர்களா என்று தெரியாது எந்த தனியார் பள்ளிக்கு சென்றீர்கள்? நீங்கள் வாங்கிய டிகிரி என்ன?


Jayaraman Pichumani
ஜன 04, 2025 22:57

அரசு கொண்டு வந்துள்ள அருமையான புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, ஆதரித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் ராகுலின் தலையாய கடமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை