| ADDED : ஜன 17, 2024 01:30 AM
பெங்களூரு : பெங்களூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவசமாக சக்கர நாற்காலிகளை, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் வழங்கினார்.பெங்களூரு, சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனையில், நர்சிங் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், சன் சைன் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவன உறுப்பினருமான சுந்தரகாந்தி நினைவாக பிரேசர் டவுனில் உள்ள ஸ்டீபன் ரோட்டில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.விழாவை, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் துவக்கி வைத்து, மருத்துவமனைகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கினார்.பின், அவர் பேசியதாவது:மத்திய அரசின் டாக்டர் அம்பேத்கர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ஆராய்ச்சி மற்றும் நுாலகம் நிறுவன சேர்மனும், நிர்வாக இயக்குனருமான சுந்தரமூர்த்தி, காங்கிரஸ் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, சமூக சேவையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.கர்நாடக மாநில காங்கிரஸ் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட இவர், தொடர்ந்து 11 ஆண்டுகள் கட்சியின் பொது செயலராக பணியாற்றினார்.கட்சி பணிகளிலும் சமூக சேவையிலும் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவர் கட்டிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அமர்ந்து நான் கட்சிப் பணி ஆற்றியதை மறக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.விழா ஏற்பாடுகளை, சுந்தரமூர்த்தி செய்து இருந்தார்.பல்வேறு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட சக்கர நாற்காலிகளுடன் அமைச்சர் தினேஷ் குண்டுராவ், மத்திய அரசின் டாக்டர் அம்பேத்கர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ஆராய்ச்சி மற்றும் நுாலகம் நிறுவன சேர்மன் சுந்தரமூர்த்தி உட்பட பலர். இடம்: பெங்களூரு.