உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு!

விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு!

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (மே 18) அதிகாலை 5.59 மணிக்கு இஸ்ரோவின் 101வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி.சி.,61 விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து, ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், திட்டம் தோல்வி அடைந்தது.பாதுகாப்பு மற்றும் புவி கண்காணிப்பிற்காக 1, 696 கிலோ எடை கொண்ட EOS-09 என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி., 61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தபட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m5of25kh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தொழில்நுட்ப கோளாறு

ராக்கெட்டின் 3வது அடுக்கு பிரிந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் திட்டம் தோல்வி அடைந்தது.

இஸ்ரோ தலைவர் பேட்டி

இதையடுத்து, இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 3வது அடுக்கு பிரியும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. தொழில்நுடப் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் ஆய்வு செய்யப்படும். ஆய்வுக்கு பின் விரிவான தகவல் தெரிவிக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை