உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் வந்தாச்சு...! கோரிக்கையும் எழுந்தாச்சு: காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்கிறார் ராகுல்

தேர்தல் வந்தாச்சு...! கோரிக்கையும் எழுந்தாச்சு: காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் வலியுறுத்தினார்.ஜம்மு காஷ்மீருக்கு வரும் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்க, ஸ்ரீநகரில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடந்தது. ராகுல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=836da9d1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வெறுப்பு

கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். இதற்கு தான் இண்டியா கூட்டணி முன்னுரிமை அளிக்கும். அன்பின் மூலமாக இந்த உலகில் வெறுப்பை ஒழிப்போம். காஷ்மீர் மக்களின் அச்சத்தை போக்குவதே எங்களின் நோக்கம். லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியின் கனவை இண்டியா கூட்டணி அழித்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் கொள்கை, இண்டியா கூட்டணி, அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் பா.ஜ., வின் நோக்கம் தோற்கடிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மக்கள், எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தலை தீர்மானிக்கும் பா.ஜ.,

கார்கே பேசியதாவது: ''ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த இந்தியாவும் நம் கட்டுப்பாடிற்குள் வந்துவிடும். வரவிருக்கும் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் எங்களுடன் நிற்பார்கள் என்று நம்புகிறோம். தேர்தலை எங்கு, எப்போது துவங்க வேண்டும் என்பதை பா.ஜ.,தான் தீர்மானிக்கிறது. அவர்கள் எங்களை குறிவைக்கின்றனர். பா.ஜ.,வுக்கு எதிராக போராடும் ஒரே நபர் ராகுல். நாட்டை காப்பாற்றவும், உரிமைகளையும் உங்களுடைய ஓட்டுகள் எங்களுக்கு தேவை'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

அஜய் சென்னை இந்தியன்
ஆக 22, 2024 22:59

மாநில அரசு உரிமையை கொடுத்து என்ன ஆச்சு என்று 360 விளக்கும் முன்பு இருந்த சூழ்நிலையை பார்த்தவர்களுக்கு தெரியும்


Ramesh Sargam
ஆக 22, 2024 20:38

பிரச்சினைகளை உருவாக்குவதெற்கென்றே ஒரு சிலர். அதில் முதலிடத்தில் இவர்.


gmm
ஆக 22, 2024 20:32

மாநிலம், மாவட்டம், யூனியன் எல்லாருக்கும் பணி ஒன்று தான். தற்போது மாநில நிர்வாகம் மாநில அரசாக கற்பனை செய்து கொண்டு அதிகாரம் செலுத்தி வருகிறது. அரசியல் சாசனத்தை விருப்பம் போல் பகுத்து அரசியல் வழக்கறிஞர்கள் வாதிட்டு வென்று வருகின்றனர். தீவிரவாதிகள் நிறைந்த பகுதி. சட்டம் ஒழுங்கு குருவி சுடும் துப்பாக்கி உடைய மாநில போலீஸ் பாதுகாக்க முடியாது. ராகுல் ஒவ்வொரு நாளும் பிரச்சினை உருவாக்கி வருகிறார். காங்கிரஸ் ராகுல், ஆம் ஆத்மி கெஜ்ரிவால் போன்று பசுந்தோல் போர்த்திய புலி.


R.MURALIKRISHNAN
ஆக 22, 2024 19:41

ராகுல் தைரியமாக காஷ்மீர் போனதே மோடி ஆட்சியில், அதுவும் மோடி இருக்கார் என்ற தைரியத்தில். இவர் பேசுகிறார் காஷ்மீரை பற்றி ....


Kumar Kumzi
ஆக 22, 2024 17:51

இத்தாலிக்கு நாடு கடத்தணும்


Srinivasan Narasimhan
ஆக 22, 2024 17:38

முதலில் இவர் கொடுக்கும் ஒவ்வொரு வாக்குறுதியும் இவர்கள் ஆளும் மாநிலத்தில் செய்து காட்டட்டும்


Rajarajan
ஆக 22, 2024 17:04

மூணு தலைக்கு முன்னர் நீங்க யாரு, எதனால இந்தியா பிரிவினை ஏற்பட்டது எல்லாம் எங்களுக்கும் தெரியும். ஆமா, நீங்க தான் பிரிட்டிஷ் குடியுரிமைனு உங்களை வெளிப்படுத்திகிட்டதா, ஒரு வழக்கு இருக்கே. அப்பறம் ஏன் நீங்க இந்தியா பத்தி கவலைபடனும் ? அதுசரி, உங்க பெயர் பின்னால இருக்கற அந்த அடைமொழிக்கு நீங்க எப்படி சொந்தக்காரர் ?? இதுக்கும் ஒரு வழக்கு பாயுமோ ??


தத்வமசி
ஆக 22, 2024 16:23

இவனுக்கெல்லாம் சொந்த புத்தியே கிடையாது. காஷ்மீரில் உள்ள அனைத்து பிரச்சினைக்கும் இவர்களின் குடும்பம் தான் காரணமே. கேள்வி மட்டுமே கேட்கத் தெரியும். அதுவும் வெளியில் இருந்து யாராவது எழுதிக் கொடுப்பார். அப்படியே இவர் படிப்பார்.


Ramesh
ஆக 22, 2024 16:22

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன செய்வோம் என்று சொல்கிறானுகளா? மோடியை தோற்கடிப்போம் அதற்கு ஓட்டு போடுங்கள் என்று தான் கேட்கிறார்கள்.


nagendhiran
ஆக 22, 2024 16:18

காங்கிரஸ் ஆளும் போது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை