உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விரிவான விசாரணை நடத்தணும்; கோவா தீ விபத்து சம்பவத்தில் ராகுல் வலியுறுத்தல்

விரிவான விசாரணை நடத்தணும்; கோவா தீ விபத்து சம்பவத்தில் ராகுல் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கோவாவில் 25 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் அரசு கிரிமினல் தோல்வியடைந்துள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள இரவு விடுதியில் அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவாவில் 25 பேரின் உயிரை பறித்த தீவிபத்து வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.இது சாதாரண விபத்து அல்ல. நிர்வாகம் மற்றும் பாதுகாப்பில் ஏற்பட்ட கிரிமினல் தோல்வி. விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வெளிப்படையான மற்றும் விரிவான விசாரணை நடத்துவதுடன், இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ராவுத்தர் வின்சி, ராஜஸ்தான்
டிச 08, 2025 11:17

இந்த அறிக்கை எந்த நாட்டில் இருந்து...


Thravisham
டிச 08, 2025 09:34

மதுபான விடுதி என்றால் ஏன் இவ்வளவு ஆவேச அறிக்கை?


பேசும் தமிழன்
டிச 08, 2025 07:35

ஆஹா.... கைப்புள்ள களம் இறங்கி விட்டார்... இனி எத்தனை தலை உருள போகுதோ.....


nagendhiran
டிச 07, 2025 23:06

பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்தால் மட்டும் இந்த பப்பு வாயை திறப்பான்? காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலமாக இருந்தால் பப்பு கோமாவிற்கு சென்றுவிடுவான்?


Venkat esh
டிச 07, 2025 21:40

இந்த ஆள் அரசியல்வாதியாக இருக்க தகுதி உள்ளதா என்று ரகசிய ஓட்டெடுப்பு நடத்தினால் காங்கிரஸ்காரர்களே ஓட்டுப்போடுவார்கள்.... வேலைக்கு ஆகாதவர் என்று


Rajasekar Jayaraman
டிச 07, 2025 20:07

முக்கியமாக இந்த ராகுல் விசாரிக்க வேண்டும்.


Sun
டிச 07, 2025 20:00

தீ விபத்திற்கு விரிவான விசாரணை நடத்தனும் உங்கள் கோரிக்கை சரியானதுதான். ஆனால் நீங்கள் தான் விசாரணை அறிக்கை வருவதற்குள் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று விடுவீர்களே? பின்னர் ஏன் அதைப் பற்றி நீங்க பேசனும்?


Priyan Vadanad
டிச 07, 2025 19:25

Ragul is becoming very much pessimistic. He will never become ismatic to win the hearts of the people. A pessimist will never be loved.


Priyan Vadanad
டிச 07, 2025 19:22

இவர் கொஞ்சநாட்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே போதும் என்று சொல்லும் அளவுக்கு இவரது ராசி வேலை செய்கிறது.


சந்திரசேகர்
டிச 07, 2025 18:26

இங்கேயும் தான் நாற்பத்தி ஒரு பேர் கரூர்ல இறந்தாங்க அதை பற்றி கிரிமினலா ஒரு வார்த்தை இல்லையே . மனிதர்கள் தனக்கு எது சாதகமோ அதை பற்றி பேசுவதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை