உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹத்ராஸ் நகர் செல்கிறார் ராகுல்? காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்

ஹத்ராஸ் நகர் செல்கிறார் ராகுல்? காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் 121 பேர் உயிரிழந்த உ.பி.,யின் ஹாத்ராஸ் நகருக்கு செல்ல எதிர்க்கட்சி தலைவர் ராகுல் திட்டமிட்டு உள்ளார்.உ.பி.,யின் ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் திறந்தவெளியில், ஆன்மிகத் தலைவரான போலே பாபாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று முன்தினம்( ஜூலை 02) நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 121 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது: ஹத்ராஸ் நிகழ்வு துரதிர்ஷ்டவசமானது. அந்நகருக்கு செல்ல ராகுல் திட்டமிட்டு உள்ளார். அந்நகரில், பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாட உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Santhakumar Srinivasalu
ஜூலை 04, 2024 21:48

அங்க போயி இறந்த குடும்பத்திற்கு தலா ₹5 லட்சம் நிதியுதவி அளிக்கவுள்ளார் இவர்!


sankaranarayanan
ஜூலை 04, 2024 20:30

பிறகு பப்புவின் உரையைக்கேட்க ஒரு கூட்டம் கூடும் அந்த கூட்டத்திற்கும் இதே கதிதான் கிடைக்கும் ஆதலால் எந்த அரசியல் வாதியும் ஹத்ராஸ் நகர் செல்ல இப்போது அனுமதிக்கக்கூடாது


செம்பருத்தி
ஜூலை 04, 2024 19:01

பா.ஜ வின் நிர்வாக சாயம் வெளுத்து வருகிறது. பிரதமர் ஏன் போகலியாம்? குஜராத் ல பாலம் அந்து போனப்போ போய் நிக்கலியாக்கும்?


SIVA
ஜூலை 04, 2024 17:42

கள்ளக்குறிச்சியா அது எங்க இருக்கு


Ramesh Sargam
ஜூலை 04, 2024 17:15

ஆறுதல் சொல்லவா அல்லது அசிங்க அரசியல் செய்யவா??


Anand
ஜூலை 04, 2024 16:56

அப்பாடா பிஜேபி ஆளும் மாநிலத்தில் பிணம் விழுந்துவிட்டது, பிறகென்ன, ஆத்தா, மவன், மகள் மற்றும் கார்கே அனைவரும் வரிசைகட்டி தூபம் போடுவர்.


vbs manian
ஜூலை 04, 2024 16:34

கள்ளக்குறிச்சி மறந்து போச்சு. கழக த்தை பகைத்து கொள்ளக்கூடாது. ஹட்ரஸில் பாதித்தவருக்கு ஏன் கட்சி சார்பில் நிவாரணம் இல்லை. எல்லாம் அரசியல்.


Swaminathan L
ஜூலை 04, 2024 16:31

மக்கள் கொத்தாகச் செத்தாலும் அதில் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது. ஹத்ராஸ் அரசியல், கள்ளக்குறிச்சி விஷயத்தில் செய்ய முடியாதே.


ram
ஜூலை 04, 2024 16:25

அங்கு போய் ஹிந்துக்களை அசிங்கமாக பேசி மத கலவரத்தை உண்டாக்காமல் இருந்தால் சரிதான்


Nandakumar Naidu.
ஜூலை 04, 2024 16:19

எதற்கு? பிண அரசியல் செய்யவா? காங்கிரஸ் ஒரு தேச, ஸ்மூக மற்றும் ஹிந்து விரோத கட்சி. அழிக்கப்பட வேண்டிய ஒன்று.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ