| ADDED : ஜூன் 04, 2024 03:44 PM
ரேபரேலி: ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் சுமார் 4 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.காங்கிரஸ் எம்.பி., ராகுல் இந்த முறை கேரளாவின் வயநாடு மற்றும் உ.பி.,யின் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் களமிறங்கினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m2b4a0bi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரேபரேலியில் 6,61,997 ஓட்டுகள் பெற்றுள்ளார். 3,73, 280 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து களமிறங்கிய பா.ஜ.,வின் தினேஷ் பிரதாப் சிங் 2,88,717 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலம் ராகுல் 4 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.வயநாடு தொகுதியில் ராகுல், 6,30,543 ஓட்டுகள் பெற்றுள்ளார். 3,54,728 ஓட்டுகள் முன்னிலையில் உள்ளார். அங்கு அவர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூ., கட்சி ஆனி ராஜா 3,54,815 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்.