உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திரா நினைவு தினம்; சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை

இந்திரா நினைவு தினம்; சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை

புதுடில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு தினத்தையொட்டி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் சோனியா ஆகியோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் இந்திராவின் 41வது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இன்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, டில்லி ராஜ் காட்டில் உள்ள இந்திரா நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இது குறித்து ராகுல் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; இந்தியாவின் இந்திரா ஒரு அனைத்து சக்திகளுக்கும் முன்னால் அஞ்சாத, உறுதியான, அசைக்கமுடியாத தலைவர். இந்தியாவின் அடையாளத்தையும், தன்னம்பிக்கையும் விட மேலானது எதுவும் இல்லை என்று நீங்களே எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள். உங்கள் தைரியம், கருணை மற்றும் தேசபக்தியே இன்றும் எனது ஒவ்வொரு அடியையும் ஊக்கப்படுத்துகின்றன, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajan A
அக் 31, 2025 17:23

போகும்போதே அவர் வெளியேறி இருப்பார். வெற்று இடத்திற்கு தயிர் வடை வைப்பது தான் பகுத்தறிவு. வெங்காயம்


M.Sam
அக் 31, 2025 16:21

ஒரு நாட்டின் நலம் கருதி எடுக்கப்படும் சில முடிவுகள் அந்த நாட்டின் தலைவருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்திராகாந்தியும் அவரின் மகன் ராஜீவ் காந்தியும் சிறந்த உதாரணம். எந்த கட்சிக்காரனும்கூம் கிடைக்காத பெருமை காங்கிரஸ் கட்சிக்கு என்று என்றும் உண்டு அவர்களின் தாயகம் உன்னதமானது என்றால் மீண்டும் காக்ரேஸ் தான் இந்தியாவை ஆளவேண்டும்


Sridhar
அக் 31, 2025 14:30

பாவம் ஒரு காலத்துல ரொம்ப பவர் புல்லா இருந்தவங்க இன்னைக்கி இவுங்க நினைவு தினத்தை அனுசரிக்கிற ஆட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்ங்கற நிலைமையில இருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை