உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் ஆணையம் மீது ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மீது ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; ஓட்டுகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறி உள்ளார். பார்லி வளாகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; ஓட்டுகள் திருடப்படுகிறது என்பதை நாங்கள் பலமுறை கூறி வருகிறோம். இதற்கு வெளிப்படையான சான்றுகள் எங்களிடம் உள்ளன. 100 சதவீதம் ஆதாரத்துடன் நான் இதைச் சொல்கிறேன்.மத்தியப் பிரதேச தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எங்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு பின்னர், எங்கள் சந்தேகங்கள் அதிகமாகின. குறிப்பாக 1கோடி பேர் புதிய வாக்காளர்களாக திடீரென சேர்க்கப்பட்டதை கண்டு, நாங்களே ஆறு மாதம் விசாரணையை தொடங்கினோம்.அவர்கள் (தேர்தல் அதிகாரிகள்) ஓய்வு பெற்றாலும் கூட தப்பிக்க விடமாட்டோம். முக்கியமாக தேர்தல் ஆணையத்தில் யார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தாலும், அவர்களை கண்டுபிடிப்போம்.இவ்வாறு ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Tamilan
ஆக 01, 2025 20:55

அடுக்கடுக்கான அர்த்தமுள்ள குற்றசாட்டுகள் .


ராமகிருஷ்ணன்
ஆக 02, 2025 06:44

தேர்தல்களில் காங்கிரஸ் ஜெயிக்க திட்டமிடாமல் சின்னபுள்ள தனமா தேர்தல் ஆணையம் பற்றி கொறை சொல்லுது.


Nava
ஆக 01, 2025 19:24

அரை வேக்காடு பப்புவின் உளறல்களுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது மேலும் முறைகேடுகள் நடந்ததற்கான சான்றுகள் தன்னிடம் இருப்பதாக உளறும் இந்த அதி மேதாவி ஏன் நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதில்லை எல்லாம் கப்சா என்பது உலகறிந்த உண்மை.


தாமரை மலர்கிறது
ஆக 01, 2025 19:07

தவறு செய்த அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம் என்று ராகுல் கூறுவது நகைப்பாக உள்ளது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சிறப்பான ஆட்சியை கொடுத்துவரும் பிஜேபி இந்தியாவை ஆளும். கத்துக்குட்டி ராகுல் ஒருக்காலும் ஆட்சிக்கு வர இயலாது . இந்த லட்சணத்தில் அதிகாரிகளை மிரட்டுகிறார்.


பேசும் தமிழன்
ஆக 01, 2025 18:44

எனக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்.... பதில் சொல்ல தெரியாது.... இப்படிக்கு பப்பு


Sriniv
ஆக 01, 2025 18:41

இதற்கு ஒரே ஒரு தீர்வு . தேர்தல் ஆணையம் ராகுல் மேல் உடனடியாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். இப்படி வாய்க்கு வந்தபடி ஆதாரம் காட்டாமல் பேசுவதற்கு நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற வேண்டும். ஆதாரம் இருந்தால் காட்டட்டும் இல்லை என்றால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைக்கணும். அதுவும் செய்யவில்லை என்றால் கைது தான்.


anuthapi
ஆக 01, 2025 18:10

தமிழக தேர்தல் ஆணையர் மாற்றம் எப்போது ?


Karthik Madeshwaran
ஆக 01, 2025 17:49

ராகுல் அதனை நீதி மன்றத்தில் நிரூபிக்க வேண்டும். பிறகு இந்திய மக்களே தண்டனை கொடுப்பார்கள். தேர்தல் ஆணையம் பாஜக கட்சியின் ஒரு கிளை பிரிவு என்பது நாடறியும். அதெப்படி நீக்கப்பட்டவர்களில் 96% சிறும்பான்மையினர் மட்டும் ?? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.


GMM
ஆக 01, 2025 17:42

EVM பித்தன் அழுத்த எல்லாம் பிஜேபி க்கு செல்கிறது என்றாய். ஆதாரம் வெளியிடாமல், ஓட்டுகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்ற கடும் சொல் ஆபத்தில் முடியும். உம்மை கைது செய்து அந்தமான் தனிமை சிறையில் வைக்க முடியும். ஓய்வு பின் , முன் தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் நிழல் பட்டால், கட்சியை பூண்டோடு ஒழிக்க முடியும்.


S.V.Srinivasan
ஆக 01, 2025 17:11

பப்புகானுக்கு பைத்தியம் ரொம்ப முத்தி போய்டுச்சு. பாவம்.


Sri Ra
ஆக 01, 2025 16:53

கொசு தொல்லை தாங்க முடியலை சாமி ..ஓட்டை ரெகார்ட் போல திரும்ப திரும்ப அதையே பேசறாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை