உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து ராகுல் பேச்சும், மத்திய அமைச்சர் பதிலடியும்!

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து ராகுல் பேச்சும், மத்திய அமைச்சர் பதிலடியும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியிருந்தார். இதற்கு, ‛‛ஒரு பொய்யை 100 முறை சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நினைக்கிறார்'' என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

சக்திக்கு எதிராக போராட்டம்

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவு விழாவில் காங்.,எம்.பி ராகுல் பேசியதாவது: இந்து மதத்தில் சக்தி என்ற வார்த்தை உள்ளது. ஒரு சக்திக்கு எதிராக நாம் போராடுகிறோம். அது என்ன சக்தி என்பது கேள்வி. ராஜாவின் ஆன்மா மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இல்லாமல் பிரதமர் மோடியால் வெற்றிப் பெற முடியாது. இது உண்மை. இவ்வாறு ராகுல் பேசியிருந்தார்.

மத்திய அமைச்சர் பதிலடி

இது குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்து மதத்தில் ஒரு சக்தி உள்ளது என ராகுல் கூறுகிறார். உச்சநீதிமன்றம் கண்டித்தாலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் அதானி குறித்து ராகுல் பேசுகிறார். குழந்தைகளைப் போல் அவர் பேசி வருகிறார். ஒரு பொய்யை நூறு முறை சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நினைக்கிறார். இது பிரதமர் மோடியின் அரசு. அவரது சம்பளக் கணக்கில் என்ன பணம் வந்தாலும் அது ஏழை மக்களுக்கே செல்கிறது. பிரதமர் மோடி பெயரில் வாகனமும், நிலமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

MARUTHU PANDIAR
ஏப் 04, 2024 16:26

பேச்சுக்கு விவஸ்தையே கிடையாது +++


ArGu
மார் 19, 2024 13:02

நீ இப்படியே மெண்டல் மாதிரி பேசிக்கிட்டே இரு... உருப்பிடியா எதுவும் பேசிறாத


பேசும் தமிழன்
மார் 19, 2024 07:51

இதே EVM மூலம் தப்பி தவறி இவர் வெற்றி பெற்றால் அது தவறு என்று கூறி அந்த பதவியை ராஜினாமா செய்வாரா? அந்த வெற்றியை உறுதி செய்தார் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுவாரா? மக்களை முட்டாள்கள் என்று நினைத்து விட்டார் போல் தெரிகிறது. இவரும் கூட்டணி கட்சி ஆட்களும் வெற்றி பெற்றால் மட்டும் EVM சரியாக வேலை செய்கிறது. அடுத்தவர்கள் வெற்றி பெற்றால். EVM சரியாக வேலை செய்யவில்லை என்று உளறி வைக்க வேண்டியது. பப்பு க்கு இதே பிழைப்பாக போய் விட்டது !!!


Meevin
மார் 19, 2024 02:41

ஆடத் தெரியாதவளுக்கு தெரு கோனல்.


R Kay
மார் 19, 2024 00:23

தோல்வி பயத்தில் அரைகுறையின் பிதற்றல்


Madhu
மார் 18, 2024 20:08

மின்னணு இயந்திரங்களின் மீது நம்பிக்கை இல்லையெனில் பல கோடிக் கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள தேர்தலை பத்திரங்களை தேர்தல் நிதியாக எதற்காகப் பெற்றீர்கள் ?


g.s,rajan
மார் 18, 2024 19:48

EVM 's Operation should be Proved to the Public ,People are also suspision in its Operation that it could be Tampered easily.


Rangs
மார் 19, 2024 03:05

தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத் தன்மையை பல முறை நிரூபித்து விட்டது. உச்ச நீதி மன்றமும் அங்கீகரித்து விட்டது. தேர்தல் தோல்வியை திசை திருப்ப, கையாளும் உத்தியே இது..


sankar
மார் 19, 2024 18:31

மிஸ்டர் ராஜன் - தோல்விக்கு காரணம் சொல்வதற்கு வழி கண்டுபிடித்து விட்டீர்கள் - நன்றி


MARUTHU PANDIAR
மார் 18, 2024 19:45

உளரலுக்கு அளவும் இல்லை, அர்த்தமும் இல்லை. பழகிப் போனது தானே? யாரைக் கொண்டு எந்த இடத்தில உக்கார வச்சிருக்காங்க பாருங்க, அவுங்கள சொல்லணும்.


Duruvesan
மார் 18, 2024 19:27

தெலுங்கானா, கர்நாடகா, ஹிமாச்சல், ல காங்கிரஸ் அப்பால விடியல் மமதா ஜெகன் பிணராயி கெஜ்ரி ஜெயிச்சா evm ஓகே. இல்லைனா ஓகே இல்ல.


Rajagopal
மார் 18, 2024 19:26

கர்நாடகா, தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தபோது மட்டும் மின்னணு இயந்திரங்கள் எப்படியோ சீராக செயல்பட்டுள்ளன. வங்காளத்தில் மமதா கட்சி வென்றபோதும் மின்னணு இயந்திரங்கள் சரியாக வேலை செய்தன. பாஜக வென்றால் அது மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


மேலும் செய்திகள்