உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலின் ஹிந்து விரோத பேச்சு: நிர்மலா சீதாராமன் கண்டனம்

ராகுலின் ஹிந்து விரோத பேச்சு: நிர்மலா சீதாராமன் கண்டனம்

புதுடில்லி: ஹிந்துக்களை வன்முறையாளர்கள் என ராகுல் கூறியதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்தார்.லோக்சபாவில் விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுகையில், ''பிரதமர் மோடி ஒட்டுமொத்த ஹிந்து மதத்தின் பிரதிநிதி அல்ல. பா.ஜ.,வின் ஹிந்துக்கள் வன்முறையாளர்கள்; உண்மையான ஹிந்துக்கள் அல்ல'' எனப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் மோடி, ''ராகுலின் பேச்சு ஒட்டுமொத்த ஹிந்துக்களின் மீதான தாக்குதல். ஹிந்துக்களை வன்முறையாளராக காட்ட ராகுல் முயற்சிக்கிறார்'' எனக் கண்டனம் தெரிவித்தார். மேலும், அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., எம்.பி.,க்களும் கண்டனம் தெரிவித்தனர்.இந்த நிலையில், ஹிந்துக்களை வன்முறையாளர்கள் என ராகுல் கூறியதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவிட்டதாவது: தன்னை ஹிந்து என சொல்லிக்கொள்ளும் ராகுல், அத்துமீறி நடந்துகொள்கிறார். இது காங்கிரசின் வெறுப்பையும், ஹிந்துக்களுக்கு எதிரான மனநிலையையும் காட்டுகிறது. இண்டியா கூட்டணியின் ஹிந்து வெறுப்பையும் காட்டுகிறது. இதன்மூலம் 'அன்பு கடையை' திறந்திருக்கிறோம் எனப்பேசியவரின் போலித்தனம் வெளிப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா

இது குறித்து ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா கூறுகையில், ''எனது சகோதரர் ராகுல், ஒருபோதும் ஹிந்துக்களை அவமதிக்க மாட்டார். அவர் பா.ஜ., மற்றும் அதன் தலைவர்களைப் பற்றிதான் தெளிவாகப் பேசினார்'' என பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

சோழநாடன்
ஜூலை 01, 2024 21:38

அம்மா.... தாயே நீ ஜிஎஸ்டி வசூலைப் பார்க்கவேண்டும். மக்களால் தேர்வு செய்யப்படாத நீங்கள் மந்திரி என்ற ஒரு போலி தகுதியை வைத்துக்கொண்டு இராகுலை விமர்சிக்கக்கூடாது. முடிந்தால் மக்களிடம் வாக்குகேட்டு, வென்று வந்து இராகுலை எதிர்த்துப் பேசவேண்டும். வாய் இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் பேசவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


subramanian
ஜூலை 04, 2024 15:24

உங்களிடம் மொபைல் உள்ளது என்பதற்காக தவறான தகவல்களை வெளியிட்டு பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். திருமதி நிர்மலா சீதாராமன் வெளிப்படையாக என்னிடம் தேர்தல் செலவு செய்ய பணம் இல்லை என்று கூறியுள்ளார்.


syed ghouse basha
ஜூலை 01, 2024 20:31

மக்கள் தாங்கள் படும் துயரங்கள் பற்றி கரடியா கத்தினாலும் கேட்காத இந்த அம்மையாருக்கு ராகுல் சொன்னதை நேரடியாக. கேட்ட மக்களை மறந்து சொல்லாததை சொன்னதாக சொல்வது வெட்ககேடான செயல்


பேசும் தமிழன்
ஜூலை 01, 2024 20:11

இங்கே தமிழ்நாட்டில் இந்து என்றால் திருடன் என்று ஒருவர் கூறினார் ....ஆனால் அவரது கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் மானங்கெட்ட இந்துக்கள் .....பிறகு இவர் பேச தானே செய்வார். ???


NAGARAJAN
ஜூலை 01, 2024 19:47

இந்த பாஜகவினருக்கு வேறு வேலையே கிடையாதோ. .


subramanian
ஜூலை 01, 2024 20:34

ராஹுல் உங்களை வன்முறையாளர் என்று கூறியுள்ளார் .


வாய்மையே வெல்லும்
ஜூலை 01, 2024 18:59

டுமிழன் அகராதியில் குக்கர் பாம் தயாரிக்கிறவர்கள் தான் அமைதி பூங்காவாக இருப்பவர்கள் போலும் சரியான கேடுகெட்ட அரசியல் கூட்டம் நடக்குது இந்தியாவில்


Saai Sundharamurthy AVK
ஜூலை 01, 2024 18:44

வயநாட்டில் சிறுபான்மையினரின் ஓட்டுக்காக தானே போய் நின்றார். இந்துக்கள் மீது அவ்வளவு கோபம், வெறுப்பு !!!!


Chandradas Appavoo
ஜூலை 01, 2024 18:16

நீ உடனே மெண்டல் ஹாஸ்பிடல் க்கு போய் டிரீட்மென்ட் எடுத்து கொள்ள வேண்டும்


venugopal s
ஜூலை 01, 2024 17:02

அது ஹிந்து விரோதப் பேச்சு அல்ல,பாஜகவினருக்கு எதிரான பேச்சு மட்டுமே!


Venkateswaran Ramamoorthy
ஜூலை 01, 2024 17:27

இந்துக்கள் வன்முறையாளர்கள் என்றால் என்ன அர்த்தம்


V Subramanian
ஜூலை 01, 2024 19:41

23 crores Hindus had voted for BJP in this election. Are they all Violent Hindus as per Raul?


subramanian
ஜூலை 01, 2024 20:41

ராஹுல் லோக்சபா எதிர்கட்சி தலைவராக இருப்பது, பா ஜ க வுக்கு அதிர்ஷ்டம். இண்டி கூட்டணிக்கு பெருநஷ்டம். நாட்டுக்கு நல்லது.


A P
ஜூலை 01, 2024 17:01

இந்தியாவின் மேல் அக்கறை எப்படி வரும். அக்கரையிலிருந்து வந்தவருக்கு இந்துக்களின் ஓட்டுகள் மட்டும் வேண்டும் . அதற்காக அவ்வப்போது இந்துவாக வேஷம் போடுகிறவர் . மன்றத்தின் வரைமுறைகளை மதிக்காத ஆனால் நாடாள மட்டும் ஆசையுள்ள ஒருவர். எம் பி போல நடந்துகொள்ள தெரியவில்லை. மோடுமுட்டி போல பேசுகிறார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பாராளு மன்றத்தில் எப்படி நாகரீகமாக நடந்து கொள்ளவேண்டும்


முருகன்
ஜூலை 01, 2024 16:51

உங்கள் கட்சி உறுப்பினர்களை பற்றி பேசினால் எப்படி ஒட்டுமொத்த ஹிந்துக்களை அவமதிக்கும் செயல் ஆகும்


Venkateswaran Ramamoorthy
ஜூலை 01, 2024 17:29

இந்துக்கள் வன்முறையாளர்கள் என்றால் என்ன அர்த்தம்


பேசும் தமிழன்
ஜூலை 01, 2024 20:13

கான் கிராஸ் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் திருடர்கள் என்றால் ...அது சரியாக வருமா ???.....நீங்கள் ஒப்புக்கொள்வீர்ககளா. ???


மேலும் செய்திகள்





புதிய வீடியோ