உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில்வேயின் தோல்வி: ராகுல் கருத்து

ரயில்வேயின் தோல்வி: ராகுல் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' டில்லியில் நடந்த விபத்தானது, ரயில்வேயின் தோல்வியையும், அரசின் உணர்வின்மையையும் எடுத்துக் காட்டுகிறது,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் கும்பமேளாவிற்கு செல்வதற்காக நேற்று இரவு டில்லி ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் வரும்செய்தி வருத்தமளிக்கிறது. இச்சம்பவமானது, ரயில்வேத்துறையின் தோல்வியையும், அரசின் உணர்வின்மையையும் எடுத்துக்காட்டுகிறது. பிரயாக்ராஜ் நகருக்கு அதிகளவு பக்தர்கள் செல்வதை கருத்தில் கொண்டு, ரயில் நிலையத்தில் சிறந்த வசதிகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், '' ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த செய்தி வருத்தம் அளிக்கிறது. அங்கிருந்து வரும் காணொளிகள் மனதிற்கு வேதனை அளிக்கிறது. இ்ங்கு ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான உண்மையை மறைக்க மோடி அரசு மேற்கொண்ட முயற்சி வெட்கக்கேடானது மற்றும் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பதவில் கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

baala
பிப் 17, 2025 09:52

உண்மையை இந்த தளத்தில் எழுதினால் பதிவிட போகிறீர்களா. இல்லையே., புறத்தையும், பொய்யாகவும் எழுதினால் மட்டுமே பதிவு. அப்புறம் ஏன் இதில் கருத்து எழுத வேண்டும் என்கிற எண்ணம் மக்களுக்கு இருக்கிறது.


baala
பிப் 17, 2025 09:52

உண்மையை இந்த தளத்தில் எழுதினால் பதிவிட போகிறீர்களா. இல்லையே., புறத்தையும், பொய்யாகவும் எழுதினால் மட்டுமே பதிவு. அப்புறம் ஏன் இதில் கருத்து எழுத வேண்டும் என்கிற எண்ணம் மக்களுக்கு இருக்கிறது.


ஜகன்
பிப் 17, 2025 06:24

இந்த கூமுட்டை ஏதாவது ஊளை இட்டுகொண்டே இருக்கனும் அவ்வளவுதான்


ரயில்நாயக்
பிப் 17, 2025 05:33

1961 ல தமிழ்நாட்டில் அரியலூரில் நடந்த ரயில் விபத்துக்கு தார்மீகப்.பொறுப்பேற்று பதவியை துறந்தவர் லால் பகதூர். கான்கிரஸ்காரர். இப்போ இருக்கிறவர் ஆயிரம் ஆக்சிடெண்ட் பாத்தாலும் அசையாதவர்.எம்.பி.ஏ படிச்சவர். திறமைசாலி.


jayvee
பிப் 16, 2025 18:44

பாவம் ..விரக்தியில் பேசுகிறார்.. பேசாமல் இத்தாலிக்கு சென்று திராட்சை தோட்டத்தில் வேலை பார்க்கலாம்


Ramalingam Shanmugam
பிப் 18, 2025 12:53

கொலம்பியா செல்லுங்க பப்பு


V Gopalan
பிப் 16, 2025 16:30

So, to stall the Parliament in the next session of 10th March, 2025, Congress and its allies have an issue.


V Gopalan
பிப் 16, 2025 16:29

Prime Minister to shuffle the cabinet at the earliest. Replace the Finance Minister, Railway and some more who are all not proved to be worth. In Bhutan the petrol rate is Rs.64-00 per lit. at the radius of five KM from Indian border where it is Rs.100-00 per lit. Jai Hind


Sridhar
பிப் 16, 2025 16:04

இவனுக்கு வருத்தத்தை விட சந்தோசம்தான் அதிகம் இருக்கும்போல?


R SRINIVASAN
பிப் 16, 2025 12:53

ஹரிஹரன்-1964 இல் அரியலூர் ரயில் விபத்து ஏற்பட்டது .அதில் 64 பேர் இறந்து போனார்கள். அதற்கு பொறுப்பேத்ரு அன்றய ரயில்வே துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் அவருடைய சொந்த விருப்பத்தில் பதவியை ராஜினாமா செய்தார். அதைப்போல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டவுடன் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். ரயில்வே விபத்து என்பது தற்செயலாக நடந்தது. ஆனால் நெத்ரு நடந்தது விபத்து. சீக்கியர்கள் படு கொலை செய்யப்பட்டதிற்கு உங்கள் குடும்பமே இந்த நாட்டை விட்டு ஓடியிருக்க வேண்டும். செய்தீர்களா?


hariharan
பிப் 16, 2025 12:23

கூட்ட நெரிசலில் பயணிகள் இறப்பது மன்னிக்க முடியாத குற்றம், இவ்வளவு மக்கள் புனித யாத்திரைக்கு வருவர் என்பதை கணித்திருக்க முடியும். அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்ககள் என்னென்ன எடுக்க வேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகள், அனைத்துப் போக்குவரத்துத் துறையினர், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் அனைத்துத் துறையினருடன் ஒருங்கிணைந்த குழு ஆலோசித்து கூட்ட மேலாண்மையை நிர்வகித்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவுமில்லை. ஆனால் ரயில்வேத்துறையை மட்டும் குறைசொல்வது சரியில்லை. எதிர்கட்சியும் சேர்ந்ததுதான் அரசு என்பதை ராகுல் எப்பொழுதும் நினைப்பத இல்லை. குறை கூறுவது ஒன்றுதான் இவர் செய்யும் எதிர்கட்சிப்பணி. இந்தப்போக்கு அவரது கட்சியை மக்களிடமிருந்து பிரித்து விடும். 40 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த அனுபவங்களை அரசுடன் பகிர்ந்து மக்களுக்கு வசதிகளை மேம்படுத்த வேண்டுமேயல்லாது கூறை கூறுவதையே தொழிலாகக் கொண்டிருக்கக் கூடாது.


முக்கிய வீடியோ