உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில்வே அமைச்சகம் சுய விளம்பரத்துக்கான துறையாக மாறிவிட்டது: கார்கே குற்றச்சாட்டு

ரயில்வே அமைச்சகம் சுய விளம்பரத்துக்கான துறையாக மாறிவிட்டது: கார்கே குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரயில்வே அமைச்சகத்தை பா.ஜ., அரசு சுய விளம்பரத்துக்கான துறையாக மாற்றிவிட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். விபத்து வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்.பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்.

மோசம்

கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே அமைச்சகத்தின் தவறான நிர்வாகத்தில் பா.ஜ., அரசு ஈடுபட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தை பா.ஜ., அரசு சுய விளம்பரத்துக்கான துறையாக மாற்றிவிட்டது. இதனை, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அடிக்கோடிட்டுக் காட்டுவது எங்களது கடமையாகும். ரயில்வே நிர்வாகம் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதற்கு இன்று நடந்த விபத்தே சாட்சி. தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும். ரயில் விபத்திற்கு பா.ஜ., அரசு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அப்பாவி
ஜூன் 18, 2024 08:37

எல்லாம் ஐ.ஆர்.சி.டி.சி யின் பேராசைதான்.


Ramesh Sargam
ஜூன் 17, 2024 20:32

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ரயில் விபத்தும் ஏட்படாதமாதிரி இவர் பேசுகிறார். குறிப்பாக சொல்லப்போனால், காங்கிரஸ் ஆட்சியில்தான் அதிக ரயில் விபத்துக்கள் ஏட்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அப்படி கூறி நான் இந்த ரயில் விபத்தை தட்டிக்கழிக்கவில்லை. மத்திய அரசும், ரயில்வே துறை அதிகாரிகளும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற ரயில் விபத்துக்கள் வராமல் மிகவும் எச்சரிக்கையா இருக்க அதிகாரிகளுக்கு ஆணையிடவேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜூன் 17, 2024 20:30

ரயில் விபத்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் சதிவேலை காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் கார்கே கூறுவதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது. சுயவிளம்பரம் என்று ரயில்வேயை சாடுவது, அதில் வேலை செய்யும் கோடிக்கணக்கான தொழிலாளிகளை இழிவு படுத்தும் சொல். விபத்துகள் நேர்வது இயற்கை தான். ஆனால் இந்த விபத்து சதியாக இருக்கக்கூடும். தேர்தலில் பிஜேபி ஜெயித்தவுடன், அந்த கடுப்பில் நேர்ந்த விபத்தாக காணப்படுகிறது. மம்தா மற்றும் கர்கேயை சிபிஐ விசாரிப்பது நல்லது.


விஜய்
ஜூன் 17, 2024 18:07

இந்த புது தொல்லை தாங்க முடியல


M R Lakshiminarayanan
ஜூன் 17, 2024 17:57

ரயில் ஓட்டுநர் செய்த தவறுக்கு பா.ஜ., அரசு எப்படி பொறுப்பாகும்?


GMM
ஜூன் 17, 2024 17:34

விபத்து பகல் பொழுது. சதியா? கவன குறைவா? குறைக்க என்ன வழி. 8 மணி நேரத்திற்கு கீழ் மட்டும் பணி. போதிய பணியாளர்கள். நியாயமான சம்பளம். பயண டிக்கெட் விலை லாபம் இல்லாமல் நிர்ணயிக்க வேண்டும். ஓட்டுநர் தேர்வில் இட ஒதுக்கீடு கூடாது. பிற பிரிவு மக்கள் தான் விரும்புவர். . இதில் உடல் வலுவற்ற முற்பட்ட பிரிவு விருப்பம் இருக்காது? இரு வழி பாதை. ரயில் பாதை இருபுறமும் 500 மீட்டர் வரை ரயில் நிர்வாகம் பொறுப்பு. சதி திட்டம் தவிர்க்க முடியும். மாநில நிர்வாகம் குடியிருப்பு, ஆக்கிரமிப்பு அகற்றி வேறு இடம் கொடுக்க வேண்டும். மத்திய அரசு நிர்வாகம் என்றாலும், மாநில வழி செல்லும் போது மாநில பொறுப்பு நிர்ணயிக்க வேண்டும்.


venugopal s
ஜூன் 17, 2024 17:18

மிகச் சரியாகச் சொல்லி உள்ளார்!


Kumar Kumzi
ஜூன் 17, 2024 21:39

அடேங்கப்பா எம்பூட்டு அறிவு


hari
ஜூன் 18, 2024 06:23

நீங்களும் சரியாகத்தான் ஜிங் ஜக் அடிக்கிறீர்கள் வேணு...


naranam
ஜூன் 17, 2024 17:03

பெங்களூர் மற்றும் தெலுங்கானாவில் நடக்கும் சாலை விபத்துகளுக்குப் பொறுப்பேற்று அந்த மானில போக்கு வரத்துத் துறை அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைங்களேன் பார்ப்போம்


Anand
ஜூன் 17, 2024 16:29

இந்த நாட்டிற்கு பிடித்த சாபம்,ஏனைய பிரிரவினைவாதிகளின் கைக்கூலி.


பேசும் தமிழன்
ஜூன் 17, 2024 16:20

கான்கிரஸ் ஆட்சியில் ரயில்வே விபத்துக்கள் நடந்ததே இல்லையா ???


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ