மேலும் செய்திகள்
அப்போலோ சிறப்பு நிபுணர் 30ம் தேதி புதுச்சேரி வருகை
1 hour(s) ago
வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த 25,000 பேருக்கு வரித்துறை நோட்டீஸ்
1 hour(s) ago | 5
அரசு வீட்டை காலி செய்ய லாலு மனைவி ரப்ரி மறுப்பு
1 hour(s) ago
புதுடில்லி: உள்நாட்டு தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை தொடர்பான ஒப்பந்தம் குறித்து இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். டில்லியில் நேற்று நடந்த 3வது இந்தியா - இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, ரூ.3,750 கோடி மதிப்பில் உள்நாட்டு தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணையை இந்தோனேசியாவுக்கு விற்பனை செய்வது குறித்து இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜாப்ரி ஜம்சோடினுடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டால், பிலிப்பைன்ஸுக்கு அடுத்தபடியாக பிரம்மோஸ் ஏவுகணையை அதிகம் வாங்கிய 2வது நாடு என்ற நிலையை இந்தோனேசிய அடையும். கடந்த 2022ல் பிலிப்பைன்ஸூக்கு ரூ.3,350 கோடி மதிப்பில் பிரம்மோஸ் பேட்டரிகள் விற்கப்பட்டன.மேலும், கடல்சார் விழிப்புணர்வு, சைபர் பாதுகாப்பு, கூட்டு ராணுவப் பயிற்சிகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. அதேபோல, சுதந்திரமான, அமைதியான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்குவது குறித்தும் இரு தலைவர்களும் ஒருமித்த கருத்தை வலியுறுத்தினர். கடந்த மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலில் பிரம்மோஸ் ஏவுகணைகள் முக்கிய பங்காற்றின. இதன் காரணமாகவே பிரம்மோஸ் ஏவுகணை உலக நாடுகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago | 5
1 hour(s) ago