எல்லைகளில் விழிப்புடன் ஆயுதப் படை வீரர்கள்; சாஸ்திர பூஜை செய்த பின் ராஜ்நாத் சிங் பாராட்டு
கோல்கட்டா: 'எல்லைகளில் நமது ஆயுதப் படை வீரர்கள் விழிப்புடன் இருப்பதால், எந்த அசம்பாவிதமும் நிகழ வாய்ப்பில்லை' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங்கில் ராணுவ வீரர்களுடன் விஜயதசமி விழாவை, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் கொண்டாடினார். ஆயுதங்களுக்கு சாஸ்திர பூஜை செய்தார். பின்னர், அவர் ராணுவ வீரர்கள் நெற்றியில் திலகம் பூசினார். தேச பாதுகாப்பு
சாஸ்திரங்களை கடைபிடிப்பதில் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம். இந்த நிகழ்வுகள் பல தலைமுறை காலமாக நடந்து வருகிறது. எல்லைகளில் நமது ஆயுதப் படை வீரர்கள் விழிப்புடன் இருப்பதால், எந்த அசம்பாவிதமும் நிகழ வாய்ப்பில்லை.