அன்புமணி மீது டில்லி போலீஸில் ராமதாஸ் பரபரப்பு புகார்
புதுடில்லி: போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்ததாக அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு புகாரை அளித்துள்ளார். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் தற்போது டில்லி வரை சென்றுவிட்டது. நான் தான் பாமக தலைவர், தனக்கு தான் கட்சியின் மாம்பழ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கூறி, அதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அன்புமணி தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், பாமக பொதுக்குழு குறித்த போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அன்புமணி சமர்ப்பித்துள்ளதாகக் கூறி, டில்லி காவல் ஆணையரிடம் ராமதாஸ் ஆதரவாளர் ஜிகே மணி புகார் கொடுத்துள்ளார். இது அன்புமணி ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உரிமையியல் நீதிமன்றத்திலும் கட்சி ரீதியான வழக்கு தொடர்வது குறித்து ஆலோசித்து வருவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.