உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகை மம்தா குல்கர்னி துறவறம்; பாபா ராம்தேவ் அதிருப்தி!

நடிகை மம்தா குல்கர்னி துறவறம்; பாபா ராம்தேவ் அதிருப்தி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் ஏற்றது குறித்து கருத்து தெரிவித்த யோகா குரு ராம்தேவ், தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மம்தா குல்கர்னி, 50. இவர், தமிழில் ஷோபா சந்திரசேகரன் இயக்கிய 'நண்பர்கள்' என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். ஹிந்திப் படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்த அவர் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளும் இருந்தன. போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க வெளிநாட்டில் இருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பினார். சில தினங்களுக்கு முன், இவர் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு துறவறம் ஏற்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.அது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட அகாராவின் மகா மண்டலேஸ்வர் பதவியும் வழங்கப்பட்டது. இது பற்றி யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது:'இதுநாள் வரை உலக இன்பங்களை எல்லாம் அனுபவித்தவர்கள், திடீரென ஒரே நாளில் துறவிகளாக மாறி விட்டார்கள். மகா மண்டலேஸ்வர் பட்டமும் பெற்று விட்டார்கள். ''துறவி ஆவதற்கு, பல ஆண்டுகள் ஆன்மிகம் குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரே நாளில் யாரும் புனிதராக முடியாது. ஜனநாயகத்தின் மாபெரும் கொண்டாட்டம் தான் கும்பமேளா. இது ஒரு புனிதமான பண்டிகையாகும். சிலர், அநாகரிகம், போதை மற்றும் தகாத நடத்தையுடன் தொடர்பு படுத்துகிறார்கள். இது நிகழ்ச்சியின் உண்மையான சாராம்சம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anantharaman
ஜன 29, 2025 11:37

துறவு பண்ணுவது ஒவ்வொருவரின் மனப் பக்குவம் சார்ந்தது. அதை விமர்சிப்பதும் கடந்த காலப் பின்னணியை சுட்டிக் காட்டி குறை கூறுவது ஈனச்செயல். பல சிறந்தோர் அருணகிரியார், வால்மீகி, விசுவாமித்ரர் போன்றோர்? முன்னுதாரணம். ராம்தேவ் மற்றும் சில மட அதிபதிகள் சொல்வது கேலிக்குரியது. அவர்தம் மனமுதிர்ச்சியின்மையைத் தான் காட்டுகின்றது.


Thirumal s S
ஜன 28, 2025 23:50

எப்படி போகுது


Ramesh Sargam
ஜன 28, 2025 21:18

பாபா ராம்தேவ் சரியாகத்தான் கூறி இருக்கிறார்.


Barakat Ali
ஜன 28, 2025 20:50

மனதில் பட்ட உண்மைகளைப் பேசிப் பேசியே ராம்தேவ் சிக்கிக் கொள்கிறார் ....


ஆரூர் ரங்
ஜன 28, 2025 20:41

ஆங்கிலப் பழமொழி by OSCAR WILDE. THE ONLY DIFFERENCE BETWEEN THE SAINT AND THE SINNER IS THAT EVERY SAINT HAS A PAST, EVERY SINNER HAS A FUTURE .


Perumal Pillai
ஜன 28, 2025 20:28

Ye chand koi deewana hai.


Priyan Vadanad
ஜன 28, 2025 20:02

பாபா ராம்தேவ் சொல்வது சரியே. துறவறம் என்பது குளிக்காமல் பல நாள்கள் இருந்துவிட்டு திடீரென்று குளித்துவிட்டால் வருவதல்ல.


தாமரை மலர்கிறது
ஜன 28, 2025 19:50

மம்தா குல்கர்னி துறவறம் ஏற்றது வரவேற்கத்தக்கது. பல இன்னல்களில் துன்புற்றவர் கடைசியில் அமைதிக்காக துறவறம் பூண்டார் என்பது ஏற்றுக்கொள்ள கூடியதே. மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக மம்தா குல்கர்னி திகழ்வார்.


புதிய வீடியோ