உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமி பலாத்காரம்: தம்பதி மீது வழக்கு 

சிறுமி பலாத்காரம்: தம்பதி மீது வழக்கு 

பேகூர்: வட மாநில சிறுமியை பலாத்காரம் செய்தவர், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.பெங்களூரு, பேகூரை சேர்ந்தவர் ஷாஹின், 45. மாநகராட்சியில் குப்பையை தரம் பிரிக்கும் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்கிறார். இவரிடம் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலை செய்கின்றனர்.இந்த தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். ஷாஹின் வீட்டின் அருகில், கூடாரம் அமைத்து தம்பதியும், மகளும் தங்கி உள்ளனர். கடந்த மாதம் 29ம் தேதி இரவு, தம்பதியின் மகளை, ஷாஹினின் மனைவி மீம்பீம், 38, வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கணவர் ஷாஹின் இருந்த அறைக்குள், சிறுமியை பிடித்து மீம்பீம் தள்ளினார். இதன்பின் சிறுமியை மிரட்டி, ஷாஹின் பலாத்காரம் செய்து உள்ளார்.இதுபற்றி சிறுமி, பெற்றோரிடம் கூறினார். ஷாஹின், மீம்பீம் மீது பேகூர் போலீசில், சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். இருவர் மீது வழக்கு பதிவானது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி