உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேடிஎம் வங்கிக்கு சிக்கல்; கடும் வணிக கட்டுப்பாடுகள்

பேடிஎம் வங்கிக்கு சிக்கல்; கடும் வணிக கட்டுப்பாடுகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பிப்ரவரி 29ம் தேதிக்கு பின், 'பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கி' டிபாசிட்கள் பெறுவதற்கு, ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.வரும் 29ம் தேதிக்கு பின், பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கி, வாடிக்கையாளர் கணக்கிலும், டிபாசிட்களை பெறுவதற்கோ அல்லது அக்கணக்குகளுடன் இணைக்கப்பட்ட வேலட், பாஸ்டேக் போன்ற பிரீபெய்டு சாதனங்களை டாப்-அப் செய்வதற்கோ, ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.வங்கிக்கு எதிரான ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது, தணிக்கை அறிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிப்ரவரி 29, 2024க்கு பின், எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கு அல்லது அக்கணக்குடன் இணைக்கப்பட்ட வேலட்கள், பாஸ்டேக், என்.சி.எம்.சி., கார்டுகள் போன்ற ப்ரீபெய்டு சாதனங்களில், கிரெடிட் செய்யப்படும் வட்டி, கேஷ்பேக்குகள் அல்லது ரீபண்டுகளைத் தவிர, மற்ற டிபாசிட்கள் அல்லது கிரெடிட் பரிவர்த்தனைகள் அல்லது டாப் அப்கள் அனுமதிக்கப்படாது.சேமிப்பு வங்கி கணக்குகள், வணிக கணக்குகள், பிரீபெய்ட் கருவிகள் உள்ளிட்டவற்றில் உள்ள இருப்புத் தொகையை, அதன் வாடிக்கையாளர்கள் திரும்ப பெற அல்லது பயன்படுத்த அவற்றின் இருப்பு உள்ளவரை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனுமதிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

pakkoda
பிப் 01, 2024 00:23

NPCL BHIM APP உபயோகிங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். அனைத்து தனியார் appகளையும் தடை செய்ய வேண்டும்


Sathyasekaren Sathyanarayanana
ஜன 31, 2024 22:00

பாரதீயர்கள் அனைவரும் போஸ்ட் ஆபீஸ் பேங்க் மற்றும் UPI / RUPAY உபயோகிக்க வேண்டும். நான் போஸ்ட் ஆபீஸ் பேங்க் மூலமாக தான் on line payments செய்கிறேன்.


Kannan
ஜன 31, 2024 21:38

only 10 % share with indian .rest of the shares with chinese companies.if bsnl introduces 5G everybody can use government upi apps


சாம்
ஜன 31, 2024 18:37

நான் பே டி எம் செயலி பயன்படுத்துவது இல்லை.. அதன் செயல் பாடுகள் எப்போதும் நம்பகம் அற்ற தன்மையுடன் இருக்கும்..


Godfather_Senior
ஜன 31, 2024 18:18

General public and Indian citizens also stop using all private players Applications and use only Government sponsored applications like UPI, BHIM as well as their respective nationalized banks applications. By doing so, we are also avoiding wastage of foreign exchange drain that runs into millions of rupees loss to the nation.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை