உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விசா விதிமுறைகள் மீறல் 11 வழக்குகள் பதிவு

விசா விதிமுறைகள் மீறல் 11 வழக்குகள் பதிவு

புதுடில்லி: 'பாலிவுட்டில் பணிபுரியும் வெளிநாட்டினர், விசா விதிமுறைகளை மீறியதாக, 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உள்துறை இணை அமைச்சர் ராமச்சந்திரன், லோக்சபாவில் கூறியதாவது: அரசுக்கு கிடைத்த தகவலின்படி, விசா உரிமைகளை மீறியதாக, 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்துமே, பாலிவுட் மற்றும் 'டிவி' துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில், நான்கு பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பேரின் பெயர்கள், கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்