உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசுக்கு எதிரான நிவாரண நிதி வழக்கு: அவசரமாக விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை

மத்திய அரசுக்கு எதிரான நிவாரண நிதி வழக்கு: அவசரமாக விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை அவசரமாக விசாரிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியுள்ளது.தமிழகத்தில், வெள்ளம் மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்தாண்டு டிசம்பரில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, 19,692 கோடி ரூபாயும், டிசம்பரில் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, 18,214 கோடி ரூபாயும் நிவாரண நிதி வழங்கும்படி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்தது.மத்திய அரசின் பல்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்த பிறகும், பலமுறை நினைவூட்டல் அனுப்பியும், இந்த நிவாரண தொகையை மத்திய அரசு விடுவிக்கவில்லை.அதனால், உடனடியாக இந்தத் தொகையை விடுவிக்க மத்திய அரசுக்குஉத்தரவிட வேண்டும். மேலும் உடனடியாக, 2,000 கோடி ரூபாயை தரும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில், தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், இதை நேற்று குறிப்பிட்டார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கும்படி வலியுறுத்தினார்.விசாரணை பட்டியலில் அதை விரைவில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என, அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Saai Sundharamurthy AVK
மே 07, 2024 16:04

திருட்டு திமுக அரசிடம் நேரடியாக கொடுக்கக் கூடாது. மாறாக பாதிக்கப்பட்டவர்கள் யார், எவர், அவர்களின் ஆதார்கார்டு, வங்கி கணக்கு ஆகியவற்றை சிபிஐ விசாரித்து பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். விவசாயிகளுக்கு நிவாரண நிதி நேரிடையாக அவர்களின் வங்கி கணக்கில் சேர்ப்பது போல் சேர்த்து விட வேண்டும்.


venugopal s
மே 07, 2024 12:19

ஒழுக்கம் கெட்ட பிள்ளையை பெற்றோர் கண்டிக்கத் தவறினால் ஊரில் இருப்பவர்கள் கண்டிப்பார்கள் என்பது போல் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மத்திய பாஜக அரசை திருத்தாததால் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு குட்டு வைக்க வேண்டியுள்ளது! இது கேவலம் என்று கூட புரியாதவர்கள் மத்தியில் ஆட்சியில் உள்ளனர்!


ஆரூர் ரங்
மே 07, 2024 11:48

மத்திய அரசு எவ்வளவு கொடுத்தாலும் ஆட்டையப் போடுவார்கள். அதற்காக உயர்நீதிமன்றம் தண்டித்தாலும் உச்சநீதிமன்றம் தண்டனைக்கு தடையுத்தரவு போடலாம். மீண்டும் மந்திரியாக பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு உத்தரவு போடலாம். எத்தனை பெரிய உத்தமமான தலைவரை பிரதமராக தேர்ந்தெடுத்தாலும் பலனிருக்குமா? கொள்கை முடிவுகளில் கோர்ட் தலையீட்டை மத்திய அரசு ஏற்கக்கூடாது.


ஆரூர் ரங்
மே 07, 2024 11:41

மொத்த அமைச்சரவையும் கை சுத்தம். முக்கியமாக பொன்முடி. இலாகா இல்லாமலேயே பாட்டிலுக்கு பத்து ஜெயிலில் இருந்தபடியே சம்பாத்தியம் . மக்களுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டாலும் நிர்வாணமாக்காமலிருந்தால் சரி.


ram
மே 07, 2024 10:54

கொடைக்கானல், லண்டன் சுற்றுலா செலவு அதிகமாக போச்சு வேற வழி தெரியவில்லை. கொடுத்த பணத்துக்கு கணக்கு இல்லை உச்ச நீதிமன்றத்தில் போய் அசிங்க பட போகுது இந்த திராவிட திருட்டு ஆட்சி


Barakat Ali
மே 07, 2024 10:41

எங்க மந்திரிங்க மேல இருக்குற கேஸுங்களை வேற மாநிலத்துல விசாரிக்கக்கூடாது னு சொல்லுவோம் ஜெ ஜெ வழக்கை கர்நாடகாவில் விசாரிக்க அரேஞ்சு பண்ணுனதே நாங்கதான் ஆனா சுருட்டுவதற்காக நிவாரண நிதி கொடுக்கலை என்பதை அவசர வழக்கா விசாரிக்க சொல்லுவோம்


M Ramachandran
மே 07, 2024 10:27

என்ன ஜால்றா தான் மத்திய அரசு மாநில அரசு டிமண்டை முதல் காரியமாக கேட்பதை கொடுத்திட வேண்டும் அவர்கள் அந்த பணத்தை ஏப்பம் விட்டால் கேட்க கூடாது


Pandi Muni
மே 07, 2024 10:19

திருட்டு கும்பல் வலிய வந்து சிக்குது விட்டுறாதீங்க பின்னாடி வருத்தப்படுவீங்க


RAAJ68
மே 07, 2024 08:20

திமுக மந்திரிகளின் கொள்ளையடித்த லட்சம் கோடிகள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன மூட்டை மூட்டையாக ஆங்காங்கே பணத்தை வைத்துள்ளனர் எல்லாவற்றையும் வெளியே எடுத்து மத்திய அரசிடம் கொடுக்கவும் என்று உச்சநீதிமன்றம் கூறினால் எப்படி இருக்கும்.


Sivasankaran Kannan
மே 07, 2024 06:42

சரி சார் கொடுத்த கோடி எப்படி செலவு செய்ய பட்டது நீதி மன்றம் கணக்கு கேட்குமே அமைச்சர் பெருமக்கள் பேச்சுக்கள், மேயர் பேச்சுக்கள் பற்றி கேட்பார்கள்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ