உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தணும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தணும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்தியாவில் இருந்து 1947 ஆக.14ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அப்போது நிகழ்ந்தவன்முறை, வெறுப்பு, துன்புறுத்தல்கள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.நம் மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாகவும், தேச ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மத்திய அரசு சார்பில் ஆக.14ல் பிரிவினை கொடுமையின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நமது வரலாற்றின் அந்த துயரமான அத்தியாயத்தில் எண்ணற்ற மக்கள் அனுபவித்த எழுச்சி மற்றும் வலியை நினைவுகூரும் வகையில், இந்தியாபிரிவினை கொடுமையின் நினைவு தினத்தை அனுசரிக்கிறது. அவர்களின் மன உறுதியை மதிக்கும் ஒரு நாளாகவும் இது அமைகிறது. கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடையவும் வேறு இடத்திற்கு சென்றனர்.இந்த நாள் நமது நாட்டை ஒன்றாக வைத்திருக்கும் நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதற்கான நமது பொறுப்பை நினைவூட்டுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

mathavan
ஆக 15, 2025 11:31

என்ன பேசுதுப்பாரு இந்த காமடி பீசு


Dv Nanru
ஆக 14, 2025 13:21

நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார் உங்களுடைய தொலைக்கொக்கு பார்வை நிச்சயம் வெற்றியடையும்... காரணம் உலக தலைவர்களே உங்களை உச்சில் வைத்து கொண்டாடுகிறார்கள் மற்ற நாட்டு பிரதமர்கள் உங்கள் காலை தொட்டு வணங்குகிறார்கள் இந்த மரியாதையை உலக தலைவர்கள் யாருக்குமே கிடைக்காதவை இது நான் பெருமைக்காக சொல்லவில்லை உலகறிந்த உண்மை ..ஜெய் ஹிந்த் ...


mathavan
ஆக 15, 2025 11:20

போட்டோஷாப்பை பாத்து நம்பும் மூடர்களே


mohanraj pandurangan
ஆக 14, 2025 12:48

if RSS and Bjpee Goes out then True Nal inakam happens.


vivek
ஆக 14, 2025 15:02

if RSS and BJP goes out Rahul will sell India....


Padmasridharan
ஆக 14, 2025 12:38

லஞ்சம் கேட்கும் அரசதிகார பிச்சைக்காரர்கள் மக்களை ஒன்றாக வைத்திருக்கும் நல்லிணக்கமா அல்லது பிரிவினையை உண்டாக்கின்றதா


M Ramachandran
ஆக 14, 2025 12:29

நல்லிணக்கமா.


Mario
ஆக 14, 2025 11:43

"ஒரே நபர், ஒரே முகவரி.. ஆனால் 3 மாநிலங்களில் வாக்களிக்கிறார்.." ஆதாரமாக போட்டோவை வெளியிட்ட ராகுல் இதுக்கு பதில் இருக்கா


P. SRINIVASAN
ஆக 14, 2025 12:20

மோடிக்கு பதில் சொல்ல தெரியாது. அவர் தனியா தான் பேசுவார் அதுவும் வானொலியில்..


vivek
ஆக 14, 2025 12:25

ராவுலு அன்னை சோனியாவுக்கு குடியிருமை வராமல் ஒட்டு உரிமை வந்தது. நீ சொல்லேன் மணிப்பூர் மரியோ


vivek
ஆக 14, 2025 12:26

ராவுலு அன்னை சோனியாவுக்கு குடியிருமை வராமல் ஒட்டு உரிமை வந்தது. நீ சொல்லேன்


vivek
ஆக 14, 2025 15:04

உனக்கு தமிழே தெரியாது...இந்தியும் தெரியாது. எதுக்கு சீனு ரீல்


mathavan
ஆக 14, 2025 11:42

யாரு எதை எதை சொல்லணும்ங்கற விவஸ்த்தையே இல்லாமப்போச்சு, பாவம்


Dominic
ஆக 14, 2025 11:17

கள்ள வோட்டில் ஜெயித்தது அதை விட்டு சாத்தான் வேதம் ஓதுவது போல irukkirathu.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை