உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வன விலங்குகள் படத்துடன் இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு டூடுல்; வெளியிட்டது கூகுள்!

வன விலங்குகள் படத்துடன் இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு டூடுல்; வெளியிட்டது கூகுள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, வன விலங்குகள் படத்துடன் இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் 76வது குடியரசுத் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், குடியரசு தினத்திற்கு சிறப்பு டுடூலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில், வன விலங்குகள் படத்துடன் இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. லடாக் பகுதியின் பாரம்பரிய உடை அணிந்த பனிச்சிறுத்தை உள்ளது. அதன் அருகே, புலி ஒன்று, இரண்டு காலில் நின்று இசைக்கருவியை வாசிக்கிறது. பாரம்பரிய உடையில் ஒரு மான், செல்கிறது. இசைக்கச்சேரிகள் நடக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

beindian
ஜன 26, 2025 09:59

இந்தியாவில் இந்தியர்கள் மிருகங்களாகி வருவதைத்தான் சிம்பாலிக்கா கூகுள் சொல்கிறான்


Sampath Kumar
ஜன 26, 2025 09:28

ஹி ஹி


A
ஜன 26, 2025 08:42

Idiots! These are for the Lunar new year celebrated by China, Philippines and many south Asian countries. Do your research properly before posting nonsense as news!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை