உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இட ஒதுக்கீடு விவகாரம்; பாட்னா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

இட ஒதுக்கீடு விவகாரம்; பாட்னா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி: பீஹாரில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் அறிவிப்பை ரத்து செய்த பாட்னா ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் சமீபத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. இது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு வேலை மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் அளவை உயர்த்த மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு, மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.அரசு வேலை, கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி., மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை 50% இருந்து 65% ஆக உயர்த்தி சட்டம் இயற்றப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 43 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், பழங்குடியினருக்கு 2 சதவீதமும் அதிகரித்து சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து பாட்னா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இட ஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா ஐகோர்ட் ரத்து செய்தது.இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. பீஹாரில் இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் அறிவிப்பை ரத்து செய்தது செல்லும் எனக் கூறிய சுப்ரீம் கோர்ட் பாட்னா ஐகோர்ட் விதித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்குகள் செப்டம்பர் மாதம் விசாரிக்கப்படும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

sundarsvpr
ஜூலை 29, 2024 17:13

நூறு விழுக்காடு தாழ்த்தப்பட்டவர் பழங்குடியினர் பிற்படத்தப்பட்டவர்களுக்கு அனுமதித்தாலும் மற்ற வகுப்பினர் மறுக்கவில்லை என்பது நிசர்சன உண்மை. எல்லா வகுப்பினர்களில் தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட பொருளாதார நிலை உள்ளவர்கள் மட்டும் சலுகைகள் பெறமுடிகிறது. ஓர் குடும்பத்தில் அப்பா அம்மா பிள்ளை பெண் பேரன் பேத்தி உயிர் வசதிகள் எப்பிடி பெறுகிறார்கள். அரசியலில் எடுத்துக்கொள்ளுங்கள் படித்த தொண்டர்கள் இல்லையா? இவர்கள் எப்போதும் எல்லா காலங்களில் அன்றாடம் காட்சிகலா ?


sankaran
ஜூலை 29, 2024 16:27

தமிழ் நாட்ல 69 சதவிகிதம் கொண்டு வந்தது ஜெயலலிதா.. இது வரைக்கும் எவனும் கோர்ட்ல கேஸ் போடல...பீகார் காரனுக்கு உள்ள அறிவு, தைர்யம் தமிழ் மக்களுக்கு இல்லை..


s chandrasekar
ஜூலை 30, 2024 05:09

நூறு % இட ஒதுக்கீடு இன்னும் ஆயிரம் ஆண்டு கொடுத்தாலும் திருப்தி அடையமாட்டார்கள் . தனியார் மயமாக்கல் தான் இந்த முறைக்கு முடிவு கட்டும் .


Rengaraj
ஜூலை 29, 2024 14:58

இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. மக்கள்தொகை கணக்கெடுப்பையும் ஜாதி வாரி கணக்கெடுப்பையும் குழப்பி மத்திய அரசு மீது ஏன் பழிபோடனும்? ஒரு மாநிலத்தில் எல்லா மாவட்டங்களும் ஒரே வளர்ச்சியை பெற்றிருக்காது. அப்படியென்றால் மாவட்டத்துக்கு மாவட்டம், தாலூக்காவுக்கு தாலுக்கா தொகுதிக்கு தொகுதி வார்டுக்கு வார்டு இடஒதுக்கீடு அப்படின்னு சமூக நீதியின் அளவுகோலை மாற்றலாமா?? மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று சொன்னால் மத்திய அரசு மேற்கண்ட கேள்வியை முன்வைக்குமே ? பட்ஜெட் விவகாரத்தில் பொருளாதார அறிவு இல்லாமல் ஒரு சிலர் தேவையில்லாமல் மத்திய அரசை குற்றம்சுமர்த்துகின்றனர். இனி வரும்காலங்களில் மத்திய அரசு தன்னை எதிர்க்கும் சமசீர் வளர்ச்சி இல்லாத அத்தனை மாநிலங்களையும் பொருளாதார ரீதியாக மாவட்ட வித்தியாசம் பார்க்கின்றது என்று இதே போன்று கேள்வி கேட்குமே மத்திய அரசை குறை சொல்லும் மாநில அரசுகள் இதில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது. ?


தமிழ்வேள்
ஜூலை 29, 2024 17:09

மாநிலத்துக்குள்ளேயே சாதியை பற்றிய புரிதல் இல்லை ...தமிழகத்தில் செங்கோட்டை வட்டத்தில் உள்ள ஒருசாதி , அங்கு பழங்குடியாம் , ஆனால் வேறு ஒரு மாவட்டம் , வட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பாம் ....சரியான வழிகாட்டுதல் இன்றி , அரசு அலுவலர் தங்களுக்கு தோன்றிய விதத்தில் சாதி சான்றிதழ்களை கையாளும் நிலை உள்ளது [ அரசின் சாதி இடஒதுக்கீட்டு பட்டியலை கூர்ந்த்து பார்த்தால் இந்த அவலம் விளங்கும் ] அப்படி இருக்க , இந்த சாதிகளுக்கு , அவற்றின் சமூக இடம் மற்றும் மதிப்பின் படி நிலைகளுக்கு ஏற்பளிக்கப்பட்ட சட்டபூர்வ அளவுகோல் என்ன ?- என்பது அரசு உட்பட யாருக்கும் சரியான புரிதல் இல்லை .1910 இல் எட்கர் தர்ஸ்டன் தயாரித்த சாதி அட்டவணை பட்டியலை இன்றுவரை பயன்படுத்தி , கோர்ட்களிலும் சான்றாக அளித்துக்கொண்டுள்ளோம் ..அவற்றுள் எத்தனை அதே நிலையில் , முன்னேறிய நிலையில் உள்ளன என்ற தரவு எங்கும் கிடையாது ...இடஒதுக்கீடு அதன் அடிப்படைகள் விரிவான மறுசீராய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய தருணம் இது ..


Iniyan
ஜூலை 29, 2024 14:45

தமிழ் நாட்டில் மட்டும் 69 சத விகிதமா? அப்போ உச்ச மன்றம் இங்கே போய் இருந்தது. கேடு கெட்ட நீதி மன்றம்


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 14:35

அரசுப்பணிகள் அதிகமாக அவுட் ஸோர்ஸிங் செய்யப்படும் இக்காலத்தில் இடஒதுக்கீடு வழக்குகள் அர்த்தமற்றவை. மக்களை ஏமாற்றும் அரசியல்வியாதிகள்.


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 14:32

அதிக பட்டியலின மக்கள் ஈடுபடும் நடத்துனர் ஓட்டுநர் பணிகளை ஸ்டாலின் அரசு அவுட் ஸோர்ஸிங் செய்துள்ளது. வெளி நிறுவனங்கள் அதில் இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில்லை. ஆனால் தாங்கள்தான் பிற்பட்ட பட்டியலின மக்களின் காவலர்கள் என்று போலி பெருமையடித்துக் கொள்கிறார்கள்.


GMM
ஜூலை 29, 2024 14:15

பிள்ளையை பெற்றோர்கள் அடையாள படுத்துவது போல், சாதியை அதன் சமூகம் தான் தெரிய படுத்த வேண்டும். மாநில நிர்வாகம் வாக்கு பெற பிறழ்வு விவரங்கள் சேகரிக்கும். MGR சாதி இட ஒதுக்கீடு கேட்கும் அனைத்து சாதியையும் தன் சாதி விவரம் கொடுக்க உத்தரவிட்டு சிறந்த முன் உதாரணம் தந்தார். சாதி இட ஒதுக்கீடு பெறும் ஒருவர் தன் சாதி மக்கள் முன்னேற வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையில் இட ஒதுக்கீடு. ஆனால், சட்டம் மத மாற்றம், கலப்பு திருமணம் அங்கீகரிக்கும் போது, சாதி இட ஒதுக்கீடு ஒரு தவறான கொள்கை. காங்கிரஸ் கட்சி வகுத்த எந்த கொள்கையும் தீர்க்க முடியாத நிலையை உருவாக்கும்.


Rengaraj
ஜூலை 29, 2024 14:09

ஐயா ரொம்ப காலமா இங்கே 69% இடஒதுக்கீடு இருக்கு பாட்னாக்கு ஒரு நீதி தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா? பீஹார்காரங்களை விட தமிழ்நாட்டுக்காரங்க கல்வி அறிவிலயும் வேலைவாய்ப்புலயும் கீழ்மட்டத்தில் இருக்காங்கன்னு ரொம்ப காலத்துக்கு முன்னாலேயே எல்லோராலும் உறுதி செய்யப்பட்டு இடஒதுக்கீடு நடந்துக்கிட்டுருக்கு. உச்சநீதிமன்றத்துக்கும் இது நல்லாவே தெரியும் ஐயா ஆனா சமூகநீதியை காப்பதில் தமிழ்நாடு ஒரு முன்மாதிரியா இருக்குன்னு. மத்திய அரசாங்கம் சொல்லி இருக்கும் மாநில முன்னேற்ற குறியீடு புள்ளிகளில் தமிழகம் முதலிடத்தில் இருக்குங்க ஐயா? தமிழக அரசாங்கமே இது சம்பந்தமாக பெருமைப்பட்டு எல்லா பேப்பர்லையும் முழுப்பக்க விளம்பரம் தந்தாங்கயா அப்படி இருந்தும் சமூக நீதி இல்லை அப்படின்னு இங்கே எல்லாரும் சொல்றாங்க ஐயா அதனாலே இங்கே 69% சதவிகித இடஒதுக்கீடு இருக்குங்க ஐயா பீஹாரை பார்த்து எங்களுக்கு ஏதாவது பண்ணுங்க ஐயா


எஸ் ஆர்
ஜூலை 29, 2024 13:32

தமிழ் நாட்டில் மட்டும் எப்படி 69 சதவீதம் பல தசாப்தங்களாக தரப்பட்டு முற்பட்ட சில சமூகங்கள் கல்வியிலும் வேலையிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன? 10 சதவீத EWS ஒதுக்கீடும் தரவில்லை


Velan Iyengaar
ஜூலை 29, 2024 14:00

அது தான் தமிழகத்தின் சாமர்த்தியம்.. திராவிட ஆட்சியின் சிறப்பு


Velan Iyengaar
ஜூலை 29, 2024 14:02

முற்பட்ட சமூகங்கள் எங்கே புறக்கணிக்கப்பட்டுள்ளன?? பத்து சதவிகிதம் அரசியலமைப்பில் இல்லாத முறையில் கொடுக்கப் பட்டுள்ளது ....பத்து சதவிகிதத்தை வரையறை செய்துள்ளவிதம் அதை விட கேவலம் .. வந்துட்டானுங்க தரவில்லை என்று .....


Velan Iyengaar
ஜூலை 29, 2024 12:53

போன ஆட்சியில் மகளிருக்கான இடஒதுக்கீடு குறித்து அறிவித்ததுவிட்டு எஸ் ஆனா மாதிரி இப்போ ஆகமுடியாது .... மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் எடுத்து முடித்தால் தான் பல பல உண்மைகள் வெளிவந்து பல பல தர்மங்கள் நிலைநாட்டப்படும் . மகளிர் இடஒதுக்கீடும் நடைமுறைப்படுத்தமுடியும் ....பாராளுமன்ற தொகுதி சீரமைப்பில் சந்திரபாபு நாயுடு நிலையும் அப்போது தான் தெளிவாக தெரியவரும்... சில கேடுகெட்ட எண்ணங்களுக்கு முற்று புள்ளி வைக்கப்படும் .....


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 14:29

மத்திய அரசு சென்சஸ் மட்டுமே எடுக்க முடியும். சர்வே எடுக்கும் உரிமையும் கடமையும் மாநில அரசினுடைய உரிமை. இடஒதுக்கீட்டை அமல் செய்ய சர்வே தான் எடுக்க வேண்டும். கருணாநிதி காலத்திலேயே ஆணையம் அமைத்து சர்வே செய்தார். ( வாக்கு வங்கிக்காக தன்னுடைய சாதியை MBC பட்டியலில் சேர்த்தார்) . ஆனால் இஷ்டத்திற்கு பட்டியலில் சாதிகளை சேர்த்தார்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை