உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இட ஒதுக்கீடு பணியிடம்: யு.ஜி.சி., விளக்கம்

இட ஒதுக்கீடு பணியிடம்: யு.ஜி.சி., விளக்கம்

புதுடில்லி: பல்கலைகளில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் குறித்து யு.ஜி.சி., அறிவித்த புதிய வழிமுறைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு, உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைபடுத்துவது தொடர்பான வழிமுறைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இது தொடர்பான வரைவு நடைமுறைகள், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, மக்களின் கருத்துகள் கோரப்பட்டுள்ளன.

இந்த வரைவு நடைமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

உயர் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்போது, எஸ்.சி., --அல்லது எஸ்.டி., அல்லது ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில், அந்தந்த பிரிவினரையே தேர்வு செய்ய வேண்டும்.ஒருவேளை, இவ்வாறு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு, அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் போதுமான அளவுக்கு விண்ணப்பிக்காத நிலையில், தற்காலிக நடவடிக்கையாக, அந்த இட ஒதுக்கீட்டை திரும்ப பெறலாம். பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களை அதற்கு நியமிக்கலாம்.நேரடி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவதற்கு பொதுவான தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரிய நிகழ்வாக அல்லது வேறு வழியில்லாத நிலையில் இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறலாம்.இவ்வாறு இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவது தொடர்பாக அறிவிக்க சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.இதன்படி, அந்த இடத்தை நிரப்ப எடுக்கப்பட்ட முயற்சிகள், இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறும் முடிவை எடுத்ததற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.பல்கலைகளில் உள்ள குரூப் 'ஏ' மற்றும் 'பி' பிரிவு பணியிடங்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகத்துக்கு முழு விபரங்களை அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். குரூப் 'சி' மற்றும் 'டி' பிரிவுக்கு, பல்கலையின் செயற்குழுவின் ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதற்கிடையே, இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக கூறி, எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்திருந்தன. இதையடுத்து, 'மத்திய கல்வி நிறுவனங்களில் கடந்த காலங்களில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை. எதிர்காலத்திலும் இது தொடரும்.'காலி பணியிடங்களை ஒருங்கிணைந்த நடவடிக்கை வாயிலாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, யு.ஜி.சி., விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தாமரை மலர்கிறது
ஜன 29, 2024 20:04

கம்மியான மார்க் எடுத்து, கோட்டாவில் கல்வி கற்றவர்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு கூட கை வலிக்கிறதாம். அதனால் விண்ணப்பம் செய்ய மாட்டார்களாம். காலியாக இருக்கும் அந்த இடங்களை பொதுப்பிரிவிற்கு மாற்றி பூர்த்தியும் செய்ய கூடாதாம். அதனால் தகுதியான ஆசிரியர் இன்றி, மாணவர்கள் படிப்பு குட்டிசுவர் ஆனாலும் பரவாயில்லை என்று திமுகக்காரர்கள் கதறுகிறார்கள்.


ஆரூர் ரங்
ஜன 29, 2024 11:03

ஆசிரியர் பணியிடங்களுக்கு போதுமான SC OBC ST விண்ணப்பங்கள் வரவில்லை என்பதற்காக அவற்றை காலியாக வைத்திருந்தால் அதே????‍???? பின்தங்கிய மாணவர்களே முக்கியமாக பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் தேறுவது இயலாது. நிலைமை இன்னும் மோசமாகும்.


Velan Iyengaar
ஜன 29, 2024 12:38

காலியிடங்களை சரியான விதத்தில் நிரப்பாமல் குறுக்கு வழியில் இட ஒதுக்கீடை நீர்த்து போக செய்வதை இப்படி கூட முட்டுக்கொடுக்கலாம்


தமிழ்வேள்
ஜன 29, 2024 16:58

ஆள் கிடைத்தால்தான் நிரப்ப ....வருபவன் அத்தனையும் பொய்ச்சான்றிதழ் ...சாதியை மாற்றி சான்றிதழ் பெற்று மோசடி செய்பவன் .அப்புறம் எப்படி பணிநியமனம் செய்வது ...மோசடி பேர்வழி வாத்தியார் பணிக்கு வந்தால் , அவனிடம் பயிலும் மாணவன் என்ன யோக்கியனாகவா இருப்பான் ?


S Regurathi Pandian
ஜன 29, 2024 10:07

ஓபிசி, எஸ்சி, எஸ்டி பணியிடங்களில் அப்படி எத்தனை இடங்களுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை? இந்த தரவுகளை முதலில் அரசாங்கம் வெளியிடவேண்டும்? எங்கெல்லாம் ஆட்கள் கிடைக்கவில்லை - விண்ணப்பிக்கவில்லை?


Velan Iyengaar
ஜன 29, 2024 10:03

BJ கட்சி எப்போதும் இது போன்ற SC/ST/OBC இடஒதுக்கீட்டை மறைமுகமாக சீர்குலைக்கும் செயல்களை செய்துகொண்டே தான் இருக்கும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்


sekar
ஜன 29, 2024 11:24

ஜாதிதான் வேண்டாம் என்னும்போது எதற்கு எஸ்சி, பீசீ, ஓட்டி, பிட்டி எல்லாம்?


Rajarajan
ஜன 29, 2024 08:43

நல்லா கவனிங்க. இவங்க தான் தனியார் நிறுவனங்களில் இடவொதுக்கீடு வேணும்னு கேக்கறாங்க. அங்கு முக்கிய பிரிவுக்கு, குறைந்தபட்சம் மூன்று தொகுப்பு தொழில்நுட்ப / மேலாண்மை கல்வி தகுதி மற்றும் திறமையோடு கூடிய அனுபவசாலிகள் தான் தேவைப்படும். இந்த வேலை குறிப்பிட்ட பிரிவினருக்கு இடவொதுக்கீட்டில் கொடுத்துவிட்டால், அந்த பிரிவில் ஆட்கள் இல்லையெனில், நிறுவனங்கள் எவ்வாறு இயங்கும் ?


VENKATASUBRAMANIAN
ஜன 29, 2024 08:39

திமுக சரவணன் ஊடகங்களில் பொய் பிரச்சாரம் செய்கிறார். ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் இதை ஆதரிக்கின்றன


GMM
ஜன 29, 2024 08:26

இட ஒதுக்கீடு பிரிவில் போதுமான விண்ணப்பம் இல்லை என்றால் மற்றவருக்கு ஒதுக்குவது தவறு இல்லை. எதிர்கட்சிகளுக்கு எல்லாம் அரசியல். எதிர்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ், திராவிட இயக்கம் நடத்தும் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கூடாது. கட்சிக்குள் மட்டும் இட ஒதுக்கீடு வேப்பங்காய். (கசக்கும்). 100 ஆண்டுகள் ஆனாலும், அரசு பணியில் இட ஒதுக்கீடு இனிக்கும்.


Kasimani Baskaran
ஜன 29, 2024 05:27

படிக்க ஆள் இல்லை என்றாலும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்? விண்ணப்பிக்காத பட்டியலினத்தவர்களில் எப்படி தகுதியானவர்களை தேடுவது?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ