உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைகிறது.வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும்.அதன் படி, கடந்த பிப்.5ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கபட்டது.இந்நிலையில், இன்று (ஏப்ரல் 09) ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறி உள்ளனர். ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்திருப்பது, பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும் நடவடிக்கையாக அமையும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

A.Gomathinayagam
ஏப் 09, 2025 14:04

கடன் வாங்கியவர் வாங்க போகவர்களுக்கு மகிழ்ச்சி .சேமிப்போருக்கு வருமானம் குறையும்


SUBRAMANIAN P
ஏப் 09, 2025 13:49

வட்டி குறையாது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் அனைத்தும் பணப்பேய்கள், பிணம்தின்னி கழுகுகள்.


P G BALAKRISHNAN
ஏப் 09, 2025 11:04

The benefit for the public is proportionately reduced and the senior citizens who depend solely upon the FD interest amount will be very much affected.


சமீபத்திய செய்தி