உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "தெலுங்கானாவில் போட்டியிடுங்கம்மா" - சோனியாவிடம் ரெட்டி வலியுறுத்தல்

"தெலுங்கானாவில் போட்டியிடுங்கம்மா" - சோனியாவிடம் ரெட்டி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: காங்.,முன்னாள் தலைவர் சோனியா தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். உ.பி., மாநிலம் ரேபரேலி தொகுதியின் எம்.பி.,யாக உள்ளார். இவரது மகன் ராகுல் கேரள மாநிலம் வயனாட்டின் எம்.பி.,யாக உள்ளார். வரும் பார்லி., தேர்தலில் தெலுங்கானா மாநிலம் ஹம்மம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சோனியாவை நேரில் சென்று வலியுறுத்தி கேட்டு கொண்டார். இது தொடர்பாக காங்., கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் அவரிடம் வழங்கினார். ' இது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என சோனியா பதில் அளித்துள்ளார்.

நிச்சயம் வெற்றி

சமீபத்திய சட்டசபை தேர்தலில் காங்., அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வர் ரேவந்த் ரெட்டி , மக்களை கவரும் பெண்கள் இலவச பஸ், ஏழைகளுக்கு மருத்துவ செலவு ரூ. 10 லட்சம் என்ற அறிவிப்பு நல்ல பெயரை தந்துள்ளது. இதனால் வரும் பார்லி., தேர்தலில் மாநிலத்தில் 17 தொகுதிகளையும் காங்., வெல்லும் என்ற நம்பிக்கையில் முதல்வர் உள்ளார். தெலுங்கானா உருவாக காரணமாக இருந்த சோனியாவை மாநில மக்கள் தாயாக கருதுகின்றனர், இங்கு சோனியா போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார் முதல்வர் ரெட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

duruvasar
பிப் 06, 2024 16:27

ஐயா கேளுங்கள் வேற எங்க நின்னாலும் தோற்று போயிடுவீங்க.


Priyan Vadanad
பிப் 06, 2024 16:06

அப்புறம் வருத்தப்படாதீங்க


Gurumurthy Kalyanaraman
பிப் 06, 2024 15:17

நிச்சயமா தெரியுமா ராகுலே அமேதியில் தோற்றார். அம்மா தெலுங்கானாவில் தோற்று விட்டால் உஙகள் கதி என்னவாகும்? எதுக்கும் கொஞ்சம் யோசித்து செய்யுங்க


RAMAKRISHNAN NATESAN
பிப் 06, 2024 14:14

இப்போ மூர்க்கன்ஸ் ஐ மட்டுமே நம்பி களமிறங்கும் நிலை .....


Pandi Muni
பிப் 06, 2024 12:47

அவனவன் சொந்த நாட்ல டெபாசிட் வாங்கட்டும்


Anand
பிப் 06, 2024 12:05

பேசாமல் மூட்டை முடுச்ச கட்டிக்கொண்டு இத்தாலிக்கு சென்று விடுவது தான் இவருக்கு நல்லது.......


ديفيد رافائيل
பிப் 06, 2024 11:21

காங்கிரஸ் தலைவர் சோனியா மட்டும் தான் ஜெயிக்க முடியும். கட்சி வாய்ப்பே இல்லை


ஆரூர் ரங்
பிப் 06, 2024 11:03

பின்னர் இடைத்தேர்தல் வரவழைக்கவா? (காங்கிரசுக்கே இது???? கடைசி லோக்சபா தேர்தலாக இருக்குமே)


TamilArasan
பிப் 06, 2024 10:54

ரெய்பரேலி தொகுதியில் நின்றாள் போலி காந்தி குடும்பத்திற்கு டெபாசிட் தேறாது என்பது தெரிந்துகொண்டு இந்த நாடகம் - அதற்க்கு MLA தேர்தலில் தோல்வி அடைந்த முதலைமைச்சர் சிபாரிசு ...


Raa
பிப் 06, 2024 10:33

இலகுவாக வெல்வது பற்றி யோசிப்பவன் மக்களின் மனங்களில் இல்லாதவன். மக்களின் மனங்களில் இருப்பவன் இலகுவாக வெல்வான். எல்லா அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ