உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு நனவாக புத்துயிர் நிதி!; சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்

நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு நனவாக புத்துயிர் நிதி!; சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்

புதுடில்லி:நடுத்தர வர்க்க மக்களின் சொந்த வீடு கனவு நனவாகும் வகையில், நின்று போன கட்டுமான திட்டங்களை நிறைவேற்றும் வகையில், புத்துயிர் நிதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது தான், வரி செலுத்தும் நடுத்தர வர்க்க மக்களின் மிகப் பெரிய கனவு. இந்த கனவை நனவாக்க, அவர்கள் வாழ்நாள் முழுதும் சேமிக்க வேண்டி இருக்கிறது. அப்படி அவர்கள் சிறுக சிறுக பாடுபட்டு சே ர்த்த பணத்தை பெற்று, வீட்டை கட்டித் தராமல் சில 'பில்டர்'கள் ஏமாற்றி வருவதும் நாடு முழுதும் நடந்து வருகிறது. கட்டுமான பணி இந்நிலையில், நடுத்தர வர்க்க மக்கள் இப்படி ஏமாற்றப்படுவதை தடுக்கவும், பணம் இல்லாமல் நின்று போகும் கட்டுமான திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கவும், புத்துயிர் நிதி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா மற்றும் ஆர்.மஹாதேவன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசு வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது. சொந்த வீடு வாங்குவோரின் நலனை பாதுகாக்கவும் வேண்டும். தேசிய சொத்து மறுகட்டமைப்பு கம்பெனி வரிசையில், ஒரு கார்ப்பரேட் அமைப்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். அல்லது ரியல் எஸ்டேட், தனியார் பொதுத்துறை நிறுவனங்கள் உதவியுடன் ஏதேனும் ஒரு அமைப்பை நிறுவி, நிறுத்தப்பட்ட கட்டுமான பணிகளை அடையாளம் கண்டு, கட்டி முடிக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் விற்கப்படாத வீடுகளை வாங்கி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம். மறுவாழ்வு அல்லது அந்த வீடுகளை அரசு ஊழியர்கள் தங்கும் 'குவார்ட்டர்ஸ்' எனப்படும் குடியிருப்பாக மாற்றலாம். இதன் மூலம் வீடு பற்றாக்குறை நீங்குவதுடன், நின்று போன திட்டங்களுக்கும் மறுவாழ்வு கிடைக்கும். வீடு கட்டும் திட்டத்துக்காக நடுத்தர வர்க்க மக்கள், தங்கள் ஒட்டு மொத்த வாழ்நாள் சேமிப்பையும் முதலீடு செய்கின்றனர். இப்படி சொந்த வீடு கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்குவோர், வீட்டிற்கான மாதத் தவணையை ஒரு பக்கமும், குடியிருக்கும் வாடகை வீட்டிற்கான மாத வாடகையை மறுபக்கமும் செலுத்துவதால், அவர்களுக்கான நிதி சுமை அதிகரிக்கிறது. இப்படி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும் சூழலில், திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாத வீடுகளால், அவர்களது சொந்த வீடு கனவு பலிக்காமல் போகும் நிலை ஏற்படுகிறது. எனவே , நிதி பற்றாக்குறையால் நின்று போன கட்டு மான திட்டங்கள், விற்கப்படாத வீடுகள் ஆகியவற்றுக்கு உயிர் கொடுக்க, தேசிய சொத்து மறுகட்டமைப்பு க ம்பெனியின் கீழ் புத்துயிர் நிதியை உருவாக்க வேண்டும். அல்லது 'சுவாமி' எனப்படும் விலையில்லா மற்றும் நடுத்தர வருமான வீட்டு திட்டங்களுக்கான சிறப்பு சாளர நிதியை நீட்டிக்க வேண்டும். மேலும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகள் நாடு முழுதும் ஒரே மாதிரி இருக்கும் வகையில் அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rajasekar Jayaraman
செப் 14, 2025 14:14

உச்சநீதிமன்றம் அவர்கள் வேலையைத் தவிர ஜனாதிபதி துணை ஜனாதிபதி கவர்னர்கள் மத்திய அரசு வேலைகளையும் கவனிப்பார்கள் அவர்களின் வேலையை மட்டும் ஆண்டு கணக்கில் தள்ளிப் போடுவார்கள் இது திருட்டு காங்கிரஸ் ஏற்படுத்திய பொறம்போக்குத்தனம்.


GMM
செப் 14, 2025 08:27

நடுத்தர மக்கள் மற்றும் GDP வளர்ச்சிக்கு உதவும்.


GMM
செப் 14, 2025 07:49

மத்திய அரசு வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது என்றால், நில பதிவு இறுதி அதிகாரம் மற்றும் கட்டிய வீடுகள் ஒப்படைப்பு, அதிகாரம் மத்திய அரசு கீழ் இருக்க வேண்டும். விற்கப்படாத வீடுகளை வாங்கி, ஓய்வு ஊதிய பண பலனை குறைத்து வீட்டை ஓய்வு ஊதியம் பெறுபவருக்கு விருப்பம் கேட்டு கொடுக்கலாம். அரசுக்கு நிதி சுமை குறையும். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகள் நாடு முழுதும் ஒரே மாதிரி இருக்க வேண்டியது அவசியம். அது போல் சொத்து விற்பனை, பதிவு, அரசு நில கோவில் நில நிரந்தர நிலை போன்றவை நாடு முழுவதும் ஒரே சட்ட விதிகள் இருக்க வேண்டும். வஃப் வாரியம், கிருத்துவ சபை போன்ற மத அமைப்புகள் எந்த பயன்பட்டு நிலமாக இருந்தாலும் கிரயம் பெற்றதாக இருக்க வேண்டும்.


Kasimani Baskaran
செப் 14, 2025 07:40

அரசாங்கமே எல்லாவற்றயும் செய்தால் தனியார் எதற்கு? கட்டிடம் கட்டிக் கொடுப்போர் மற்றும் குத்தகைதாரர்களை நெறிமுறைப்படுத்த நீதிமன்றம் வேலை செய்ய வேண்டும். வழக்குப்போட்டால் இருவரும் திவாலாகுமளவுக்கு வழக்கு நடத்தி 25 வருடம் சென்ற பின் இரண்டு பக்கமும் ஏற்றுக்கொள்ளாத வகையில் தீர்ப்பு வரும். ஆக இவர்கள் நீலிக்கண்ணீர் வடித்து நடுத்தட்டு மக்கள் பற்றி கருத்து சொல்வதே கூட உள்நோக்கத்துடன் இருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


Ramesh Trichy
செப் 14, 2025 10:11

மிக சரியான கருத்து.


GMM
செப் 14, 2025 07:39

சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது தான், வரி செலுத்தும் நடுத்தர வர்க்க மக்களின் கனவு. வரி செலுத்தும் மக்களுக்கு முன்னுரிமை. நில பதிவு செலவு உண்மை கிரயம் விட மாநில ஊழல் சட்டங்களால் பலமடங்கு அதிகரித்து வருகிறது. நில பதிவு ஊழலால் வீட்டை கட்டித் தராமல் சில பில்டர்கள் ஏமாற்றி வருவதும் நாடு முழுதும் நடந்து வருகிறது. புத்துயிர் நிதி உதவும். நில விலை, பத்திர பதிவு, வரை பட ஒப்புதல், பட்டா, மின் இணைப்பு வரை மாநில ஊழல் கணிசமான நிதியை விழுங்கி வருகிறது. அரசு அபிவிருத்தி மூலம் தான் நில விலை அதிகரிக்கிறது. மறு விற்பனையில் அரசு திரும்ப பெறுவது இல்லை. 1947 ல் 3000. 1967 ல் 3 லட்சம் 3000. 3 லட்சம் அபிவிருத்தி பணம்.


அப்பாவி
செப் 14, 2025 07:11

அடப்பாவமே... 2022லேயே எல்லோருக்கும் வூடு குடுத்தாச்சே. பாஞ்சி லட்சம் போட்டாச்சே. வருஷம் ரெண்டு கோடி பணி ஆணை குடுக்கிறாங்களே. சுப்ரிம் கோர்ட் எப்பவுமே .......


Ramesh Trichy
செப் 14, 2025 10:17

அப்ப உனக்கு கிடைத்த 15 லட்சத்தை Government க்கு திருப்பி கொடுத்துடு.


சமீபத்திய செய்தி