உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிராவில் வெடித்தது கலவரம்

மஹாராஷ்டிராவில் வெடித்தது கலவரம்

தானே : எல்.கே.ஜி., படிக்கும் 4 வயது சிறுமியர் இருவரை துப்புரவு தொழிலாளி பாலியல் கொடுமை செய்த சம்பவத்தின் எதிரொலியாக, மஹாராஷ்டிராவின் தானே நகரில் கலவரம் வெடித்தது. பெற்றோர் மற்றும் பொது மக்கள் திரண்டு பள்ளியை அடித்து நொறுக்கினர். ரயில் மறியல், சாலை மறியல், கல்வீச்சு நடந்து பலர் காயம் அடைந்தனர்.தானே அருகே பத்லாபூரில் உள்ள தனியார் பள்ளியின் மழலையர் வகுப்பில் படிக்கும் சிறுமி, தன்னையும் தன் தோழியையும் பள்ளி கழிப்பறையில் மடக்கி, தவறான முறையில் ஒருவர் தொட்டதாக தாத்தாவிடம் கடந்த 16ம் தேதி கூறினார்.

பயந்து அழுதனர்

அவர், சிறுமியின் பெற்றோரிடம் கூற, அவர்கள் மற்றொரு சிறுமியின் பெற்றோரிடம் விசாரித்தனர். அந்த சிறுமியின் பெற்றோர், தங்கள் மகள் சில நாட்களாக பள்ளி செல்ல பயந்து அழுவதாக கூறினர்.இரண்டு சிறுமியரிடமும் விசாரித்த போது, கடந்த 12ம் தேதி பள்ளியின் துப்புரவு தொழிலாளி தங்களை கழிப்பறைக்கு அழைத்துச் சென்றதாக குழந்தைகள் கூறினர். இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். ஒரு குழந்தையின் பிறப்புறுப்பில் காயம் இருப்பது உறுதியானது. மற்றொரு குழந்தையிடமும் அத்துமீறிய அடையாளம் தெரிந்தது.பெற்றோர் அன்று மதியமே பள்ளிக்கு சென்று முறையிட்டனர். அவர்கள் பத்லாபூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மூன்று மணி நேரம் கழித்து பள்ளிக்கு வந்த போலீசார் சிறுமியரிடம் வாக்குமூலம் பெற்றனர். 'போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, குற்றவாளியை கைது செய்ய வேண்டும்' என பெற்றோர் கூறினர். இன்ஸ்பெக்டர் சுபதா ஷிட்டோலே, 'முதலில் சம்பவத்தை உறுதி செய்ய வேண்டும். அதன் பின்பே எப்.ஐ.ஆர்., போட முடியும்' என கூறிவிட்டு, துப்புரவு தொழிலாளி அக்ஷய் ஷிண்டேவை, 23, விசாரணைக்கு அழைத்துச் சென்றார். பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கேட்டனர். மழலையர் வகுப்புகள் உள்ள பகுதியின் கேமரா, சில நாட்களாக வேலை செய்யவில்லை என பள்ளி நிர்வாகம் கூறியது. இதனால் நம்பிக்கை இழந்த பெற்றோர், தானே மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் புகார் கொடுத்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரியின் தலையீட்டால், 17ம் தேதி எப்.ஐ.ஆர்., பதிந்து அக் ஷயை போலீசார் கைது செய்தனர்.மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கு இந்த சம்பவம் குறித்து நேற்று தான் தகவல் தெரிந்தது. அவர்கள் ஆவேசத்துடன் பள்ளி முன் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். சிலர் பள்ளிக்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கினர்.

களத்தில் குதித்தனர்

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பொதுமக்களும் களத்தில் குதித்தனர். பத்லாபூர் முழுதும் போராட்டம் பரவியது. கடைகள் அடைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் பத்லாபூர் ரயில் நிலையத்தையும், தேசிய நெடுஞ்சாலையையும் முற்றுகையிட்டனர். காலை 10:00 மணிக்கு துவங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது. மும்பை - கர்ஜாட் இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் வேறு வழியாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டன. போராட்டம் தீவிரமானதை அடுத்து, மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன், பத்லாபூர் ரயில் நிலையத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார். “குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கை விரைந்து முடிக்க ஐ.ஜி., தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது,” என அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கிரிஷ் மகாஜன் விவரித்தார். ஆனாலும், சமாதானம் அடையாத மக்கள், குற்றவாளியை உடனே துாக்கிலிட வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களில், கூட்டத்தினரை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

சட்டப்படி நடவடிக்கை!

கல்வி நிறுவனங்கள் தங்களிடம் படிக்கும் மாணவியர் மீது மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும். வேலைக்கு ஆட்களை எடுக்கும் முன், அவர்களின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். இதில், அலட்சியமாக செயல்பட்டது தெரிந்தால் கல்வி நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது நடவடிக்கை பாயும். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து, விரைவில் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்

.-ஏக்நாத் ஷிண்டேமஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சூரியா
ஆக 21, 2024 19:08

"ஊழியர்களைத் தேர்வு செய்யும் பொழுது அவர்களது தகுதி/பின்புல விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என இப்பொழுது ஓலமிடுகிறார்கள். அவ்வாறு செய்தால், சமூக நீதி காக்கப்படவில்லை, இட ஒதுக்கீட்டைப் கடைபிடிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். என்னதான் செய்வது!


Indian
ஆக 21, 2024 13:49

எங்க பார்த்தாலும் ஒரே பலாத்காரம் ??? .


வைகுண்டேஸ்வரன்
ஆக 21, 2024 11:47

வாசகர்கள் பாவம். மே வங்க சம்பவத்துக்கு பொங்கி பொங்கி குருடாகி, செவிடாகி, ஊமையாகி விட்டாங்க போல. இதுக்கு சத்தமே காணவில்லை. மம்தா பானர்ஜி அவர்களை நோக்கி கத்திய மாதிரி, இப்போ கத்த மாட்டார்கள். பிஜேபி கூட்டணி ஆட்சி அல்லவா? உருட்டி உருட்டி ஏதோ எழுதியிருக்கிறார்கள்..


MADHAVAN
ஆக 21, 2024 11:16

இப்போ மூடு


Velan Iyengaar
ஆக 21, 2024 10:50

bj கட்சி இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தாதது ஆச்சர்யத்தை தருது .....அவர்கள் எப்போதும் பிரிஜ் பூஷன் போன்றவர்களுக்கு ஆதரவாக தானே நடந்துகொள்வார்கள் ????


ஆரூர் ரங்
ஆக 21, 2024 12:07

பொன்முடி விடுதலையை எதிர்த்து திமுக அரசு அப்பீல் செய்யாதது ஏனுங்க? மகன் மருமகனுக்கு கப்பம் கட்டிவிட்டாரா?


ஆரூர் ரங்
ஆக 21, 2024 10:43

ஒரு ஊழியர் செய்த தவறுக்காக பள்ளியைத் தாக்கி மாணவர்களின் எதிர்காலத்தைக் கெடுப்பது தகாது .


Rajathi Rajan
ஆக 21, 2024 11:41

லூச நீ நேரத்துக்கு ஒரு மாதிரி பேசுற ,


Sampath Kumar
ஆக 21, 2024 09:50

சனாதன சங்கிகளின் சப்போர்ட் அச்சில் இப்படி தாண்ட அடக்கும் ஒன்னும் பண்ண முடியாது மக்கள் அம்புட்டுபேரும் முட்டாள்கள் என்று நினைப்பு அந்த ஆணவத்தில் தான் அரசு இப்படி நடக்குது


ganapathy
ஆக 21, 2024 12:52

வேங்கைவயல் போக துப்பில்லை கள்ளக்குறிஞ்சி போக துப்பில்லை...ஆனா அமெரிக்க பயணம் இனிக்குதா?


Palanisamy Sekar
ஆக 21, 2024 08:51

பொதுமக்கள் இப்படி போராட்டங்களில் ஈடுபடுகின்ற அளவுக்கு போலீசாரின் செயல்பாடுகளில் குறைகள் அதிகம் தெரிகின்றது. ஏனோதானோ என்று விசாரிப்பதும், பள்ளி நிர்வாகம் கொடுக்கும் சன்மானத்துக்கு பணிந்து செய்லடுவதாக மக்கள் குறைகூறுவதை புறந்தள்ளிவிட முடியாது. குழந்தைகள் படிக்கின்ற பள்ளிகளில் பாதுகாப்பினை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். ஒவ்வோர் முறையும் இதுபோல பாலியல் குற்றங்களை கண்டிப்பதுடன் நின்றுவிடவே கூடாது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து பள்ளிகளை கண்காணிப்பதை உறுதி செய்திடவேண்டும். குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்றால் அது தேசமே இல்லை. நரகம்.


VENKATASUBRAMANIAN
ஆக 21, 2024 08:43

மது போதை தான் இதன் முக்கிய காரணம். மேலும் திரைப்படங்கள் சீரியலும ஒரு காரணம். அதில் வரும் சம்பவங்களை பார்த்து தவறு செய்கிறார்கள். வன்முறை அதிகமாக காட்டப்படுகிறது. சென்சார் போர்டு என்ன செய்கிறது.


rasaa
ஆக 21, 2024 11:17

செல்போன்... இதுதான் முக்கிய காரணம்.


Kasimani Baskaran
ஆக 21, 2024 06:06

மழலையர்களைக்கூட விட்டு வைக்காத காமுகர்களை வேலைக்கு வைப்பது மட்டுமல்ல கண்காணிப்பு காமிராக்கள் வேலை செய்யாதது கூட பள்ளி நிர்வாகத்துக்கு தெரியாதது மகா கேவலம். புகார் கொடுத்த பொழுதும் அதை பூசி மெழுக நினைத்தது அதை விட கேவலம். சிறார்களுக்கும் மழலையர்களுக்கும் எது செய்தால் பெரியவர்களிடம் உடனே சொல்லவேண்டும் என்பதை சொல்லிக்கொடுப்பது சிறந்தது. பெற்றோரின் கண்காணிப்பு மற்றும் பிள்ளைகளுடன் பள்ளி நிகழ்வுகள் பற்றிய தொடர் உரையாடலும் மிக அவசியம்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ