உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு: ஹரியானாவில் 3 பேர் கைது!

ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு: ஹரியானாவில் 3 பேர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளா ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் நைவேத்தியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பித்தளை கிண்ணத்தை திருடியதாக, ஹரியானாவில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:திருட்டு சம்பவம் கடந்த அக்.13ம் தேதி நடந்துள்ளது. ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பேட்டரி போலீஸ் ஒருவரும் இருந்துள்ளார். இவ்வளவு பாதுகாப்புக்கு இடையே இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கிறது. பித்தளை கிண்ணம் திருட்டு குறித்து கோயில் அதிகாரிகள், அக்.15ம் தேதி புகார் அளித்தனர்.இதனை தொடர்ந்து, நாங்கள் கோவிலில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்ததில், திருட்டு நடத்தியவர்கள் அங்குள்ள ஓட்டலில் தங்கி இருந்துள்ளார்கள்.அதன்பிறகு, கர்நாடக மாநிலம் உடுப்பிக்கு சென்று அங்கிருந்து ஹரியானா மாநிலத்திற்கு தப்பினர்.ஹரியானாவில் கைதான மூன்று பேரையும் திருவனந்தபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்துவோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

வைகுண்டேஸ்வரன்
அக் 20, 2024 23:31

திருடினவனுங்க இந்துக்கள். அதுவும் வடக்கனுங்க. கடவுள் ஒண்ணும் பண்ண முடியவில்லை. கேரளா போலீசைக் குறை சொல்ல வந்துட்டானுங்க.


Sathyanarayanan Sathyasekaren
அக் 21, 2024 04:46

வைகுண்டேஸ்வரன் தயிரியம் இருந்தால் உன் சொந்த பெயரில் கருது எழுது


அப்புசாமி
அக் 20, 2024 22:27

இங்கே ஆட்டையப் போட்டு வடக்கே குடுக்கறது சகஜம் தானே..


Puliyur Raju
அக் 20, 2024 21:19

இதென்ன பெரிய விஷயம். எங்க தமிழ்நாட்டுப் பக்கம் வந்து பாருங்க.


RAMAKRISHNAN NATESAN
அக் 20, 2024 20:47

அவர்களது பெயர்கள் என்னென்ன ??


Anantharaman Srinivasan
அக் 20, 2024 20:31

அவ்வளவு பெரிய பித்தளை பாத்திரம் திருட்டு போனது கூட தெரியவில்லை. கேரளா போலீஸை தட்டி எழுப்புங்கள்.


Ramesh Sargam
அக் 20, 2024 19:25

கேரளாவில் கடந்த சில நாட்களாக திருடர்கள் ஏடிஎம் மையங்களில் பணத்தை திருடினார்கள். இப்பொழுது ஹிந்து கோவில் ஒன்றில், அதுவும் உலகளவில் பிரசித்திபெற்ற ஒரு கோவிலில். கேரள அரசும் தூங்குகிறது, காவல்துறையும் தூங்குகிறது. தட்டி எழுப்புங்கப்பா அவர்களை, இன்னொரு திருட்டு நடப்பதற்கு முன்பு.


Narayanan Muthu
அக் 20, 2024 19:07

வடமாநில இளைஞர்களை பார்த்து நாடே பெருமிதமடைகிறது. எங்கேயோ கேட்ட குரல். எப்படிர்ரா


N Sasikumar Yadhav
அக் 20, 2024 20:12

மேவாத் அமிதி குரூப் அனைத்து இடங்களிலும் கைவரிசை காட்டுகிறது அமிதி குரூப்பை பார்த்து உலகம் வியந்து பார்க்கிறது


venugopal s
அக் 20, 2024 17:31

அட அல்பங்களா! பித்தளைக் கிண்ணம் தான் கிடைத்ததா, அதுவும் உலகப் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில்?


RAMAKRISHNAN NATESAN
அக் 20, 2024 20:49

அங்கே மறநிலையத்துறை இருந்திருந்தால் அதுவும் எஞ்சியிருக்காது ....


RAMAKRISHNAN NATESAN
அக் 20, 2024 20:50

அறத்தின் எதிர்ப்பதம் மறம் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை