உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக கோப்பையுடன் இந்தியா வந்தது ரோஹித் படை! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

உலக கோப்பையுடன் இந்தியா வந்தது ரோஹித் படை! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டி-20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியினர் இன்று காலை, தனி விமானம் மூலம், புதுடில்லி வந்தடைந்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடந்தது. பைனலில் (பார்படாஸ்) 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, உலக கோப்பை வென்றது. இந்த மகிழ்ச்சியில் இருந்த இந்திய வீரர்கள், பார்படாசில் ஏற்பட்ட 'பெரில்' புயல் காரணமாக, 3 நாள் ஓட்டலில் முடங்கினர். இதனால் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்திய வீரர்களை அழைத்துவர, தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.வானிலை சரியான நிலையில், நேற்று காலை 11:30 மணிக்கு (இந்திய நேரப்படி) விமானம் பார்படாஸ் சென்றது. அங்கிருந்து, மதியம் 2:20 மணிக்கு, இந்திய வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி, பயிற்சியாளர்கள், இந்திய பத்திரிகையாளர்கள் தனி விமானத்தில் கிளம்பினர். 16 மணி நேர பயணத்துக்குப் பின், இன்று காலை, டில்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். வெற்றிக் கோப்பையுடன் வந்த வீரர்களுக்கு, விமானநிலையத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், வாழ்த்து மழை பொழிந்தனர்.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு:

இன்று பிரதமர் மோடியை, டி-20 உலக கோப்பையுடன் இந்திய வீரர்கள் சந்திக்க உள்ளனர். மதியம் இந்திய வீரர்கள் மும்பை செல்கின்றனர். மாலையில் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை, இந்திய வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக ('ரோடு ஷோ') செல்ல உள்ளனர். இரவில் வீரர்களுக்கு வான்கடே மைதானத்தில், பாராட்டு விழா நடக்கும். பின் பி.சி.சி.ஐ., சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்புசாமி
ஜூலை 04, 2024 10:49

வேலை வெட்டி இல்லாத ரசிகர்கள்


hari
ஜூலை 04, 2024 20:26

நீ போடுற மொக்கை கமெண்டை விடவா கோவாலு....உன் வாயில என்னைக்கு நல்லது வந்திருக்கு...


PoojaLakshmi Thanasekaran
ஜூலை 04, 2024 10:16

good


ravi
ஜூலை 04, 2024 10:15

நீங்கள் பிரதமராக இருந்தால் கண்டிப்பாக உங்களை சந்திப்பார்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 04, 2024 09:12

போகும்போது பிரதமரை சந்திச்சுட்டுதான் போகணும் ...... கப்பு வாங்கிட்டு வந்தா பிரதமரை சந்திச்சுட்டுதான் வீட்டுக்கே போகணும் ........


Srinivasan K
ஜூலை 04, 2024 12:29

it happened in 1983 world Cup win and as well in 2011. what is the issue when team meeting pm modi. will anyone ask if pappu is the PM


Senthoora
ஜூலை 04, 2024 15:24

50 ஒவேரில் சாதிக்க முடியாததை, அவமானத்தை மீட்டு கொண்டுவந்த வீரர்கள். என்ன ஒரு ஆறுதல் பரிசு.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை