வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜெகன் ஆந்திர திராவிட விஷம்.
அமராவதி:ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக,ஒய்.எஸ்.ஆர்., காங்., எம்.பி., மிதுன் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.ஆந்திராவில் ரூ.3,200 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட தனுஞ்சய் ரெட்டி, கிருஷ்ண மோகன் ரெட்டி மற்றும் பாலாஜி கோவிந்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து ஒய்.எஸ்.ஆர்., காங்., எம்.பி., மிதுன் ரெட்டியிடம் மதுபான மோசடி குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தியது.இந்த விசாரணை பல மணி நேரம் நீடித்தது. அதை தொடர்ந்து இரவில் விஜயவாடாவில் அவரை கைது செய்தது.இது குறித்து ஒய்.எஸ்.ஆர்.சி.பி மூத்த தலைவர் மல்லாடி விஷ்ணு கூறியதாவது:மிதுன் ரெட்டி மீதான வழக்கு, கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர்களைக் கைது செய்வதற்கான ஒரு பெரிய பழிவாங்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.ஆனால் சந்திரபாபு நாயுடுவின் பொய்யை நாங்கள் மீண்டும் கூறுவோம்.ஆந்திர அரசின் நடவடிக்கைகள் எவ்வளவு பழிவாங்கும் விதமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு கூட்டணி அரசின் தோல்விகள் மற்றும் ஊழலை அம்பலப்படுத்துவதில் நாங்கள் உறுதியுடன் இருப்போம்.இவ்வாறு மல்லாடி விஷ்ணு கூறினார்.
ஜெகன் ஆந்திர திராவிட விஷம்.