மேலும் செய்திகள்
விபத்தில் சிக்கிய மணமகள் மணமேடையாக மாறிய மருத்துவமனை
1 hour(s) ago
ஆவணங்களை மாற்றி எழுதிய தேவசம் போர்டு மாஜி தலைவர்
1 hour(s) ago
ஜார்க்கண்ட், மே.வங்கத்தில் ரூ.10 கோடி ரொக்கம் பறிமுதல்
1 hour(s) ago
மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சுங் கத்துறை அதிகாரிகள் நடத் திய அதிரடி சோதனையில், 53 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் மற்றும் தங்கம், வைரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த, 13 - 20ம் தேதி வரை சுங்கத்துறை அதிகாரி கள் பலமுறை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போதை பொருள், தங்கம், வைரம் போன்றவற்றை கடத்தி வந்த, 20 பேரை கைது செய்தனர். இது குறித்து சுங்கத்துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஒரு வாரத்தில், சுங்கத்துறையினர் ஏழு முறை சோதனை நடத்தினர். அப்போது, 25.32 கிலோ உயர்தர கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 26 கோடி ரூபாய். மேலும், 27 கிலோ உயர்தர கஞ்சா விதைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைபொருளின் மதிப்பு, 28 கோடி ரூபாய். இது தவிர இந்த கால கட்டத்தில் நான்கு பயணி யரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 551 கி., தங்கம் பறிமுதல் செய்யப் பட்டது. இதன் மதிப்பு, 65.57 லட்சம் ரூபாய். இதேபோல் பயணி ஒருவர் வாய் வழியே விழுங்கி கடத்திய, 43.5 காரட் இயற்கை வைரம், 426.25 காரட் செயற்கை வைரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 54.13 லட்சம் ரூபாய். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago