உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செங்கோலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி.,: தமிழில் கண்டனம் தெரிவித்த உ.பி., முதல்வர்

செங்கோலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி.,: தமிழில் கண்டனம் தெரிவித்த உ.பி., முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபாவில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்த சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க்கும், இண்டியா கூட்டணிக்கும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.லோக்சபாவில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோல் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இண்டியா கூட்டணியை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஆர்.கே.சவுத்ரி, ''லோக்சபாவில் செங்கோலை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்'' என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n267vask&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது கருத்துக்கு காங்கிரசும் ஆதரவளித்தது. ஆனால் அவரது கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். செங்கோலை அகற்ற வேண்டும் எனக் கூறியதற்கு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.தனது 'எக்ஸ்' தளத்தில் அவர் தமிழில் பதிவிட்டதாவது: இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. 'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி, அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாசாரத்துக்கு எதிரான இண்டியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது. 'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பிரதமர் மோடி, பார்லி.,யில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

MADHAVAN
ஜூன் 28, 2024 11:41

அரசியல் சாசனம் வைக்கவேண்டும் என்று கூறினாரே, அதுக்கு பதில்சொல்லுங்க, ஏனென்றால் பிஜேபி கும் அரசியல் சாசனத்திற்கும் ஏழாம் பொருத்தம்,


அருண், சென்னை
ஜூன் 27, 2024 22:42

ஆக இவர்கள் பாராளுமன்றத்திற்கு போனது எதை பற்றியும் கவலைப்படாமல், மக்கள் பிரச்சனையை பற்றி பேசாமல், ஏதடா இருக்கிறதை எடுக்கலாம்ன்னு, காசுபாக்கலாம்ன்னு பார்க்குராங்க... இதுகலெல்லாம் என்ன உருப்படியா செய்யப்போகுது...


S S
ஜூன் 27, 2024 20:54

இது ஜனநாயக ஆட்சியா அல்லது மன்னராட்சியா?


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 17:17

வெள்ளிச் செங்கோல் பெற்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன கூறுவார்? பரம்பரை முடியாட்சி நடத்தும் குடும்பம் இதனை ஆட்சேபிக்க முடியுமா?


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 17:13

முடியாட்சி ஒழிந்து குடியரசாக ஆகிவிட்டதால் இனி ராஜா, ராணி, அரசி போன்ற மன்னர்காலப் பெயர்களை தடை செய்து விடலாமா?


venugopal s
ஜூன் 27, 2024 16:44

அடுத்த வாரிசு?


தமிழ்வேள்
ஜூன் 27, 2024 19:59

நீ சொல்வது நிச்சயம் நடக்கும் ....விதம் விதமாக கதறுவதற்கு தயாராக இரு.. இவருக்கு மோடி நூறு மடங்கு மென்மையான பிரதமர் அப்படீன்னு கதறப்போவது சர்வ நிச்சயம்


என்றும் இந்தியன்
ஜூன் 27, 2024 16:39

சொன்னதில் என்ன தவறு. அதனால் என்ன உபயோகம் சொல்லுங்கள்???நான் பிரதமராக இருந்திருந்தால் எதற்கும் பிரயோஜனம் இல்லாத எம்பிக்கள், உளறும் / அனாவசிய கூச்சல் /போடும் எம் பிக்களை அவர்கள் தவறு செய்யும் போது தவறின் எடை அறிந்து 5 முதல் 500 தடவை அந்த செங்கோலை எடுத்து அவர்கள் முதுகில் போடு போடு என்று போட்டிருப்பேன்


ganapathi subramanian
ஜூன் 27, 2024 18:27

super


Saai Sundharamurthy AVK
ஜூன் 27, 2024 16:23

ஆஹா ! யோகிஜிக்கு தமிழ் தெரிகிறது. வாழ்த்துக்கள். ஆனால், இங்குள்ளவர்களுக்கு தான் தமிழும் தெரியவில்லை கூடவே தமிழ் இலக்கியம், கலாச்சாரம், இதிகாச, புராணங்களும் தெரியவில்லை.


Vaduvooraan
ஜூன் 27, 2024 15:55

தமிழுக்கும் தமிழர் உணர்வுக்கும் எதிரான கருத்துக்களை உடைய கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் நம்ம ஊரு தமிழ் காவலர்கள் இதுக்கு என்ன சொல்றாங்கன்னுகேட்டு சொல்லுங்கப்பா


Abhivadaye
ஜூன் 27, 2024 15:52

திராவிட மாடல் அரசு, செங்கோலை எதிர்கிறதா , இல்லை ஆதரிக்கிறதா , என ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லுமா?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ