உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சனாதன விவகாரம்: உதயநிதிக்கு நிபந்தனை ஜாமின்

சனாதன விவகாரம்: உதயநிதிக்கு நிபந்தனை ஜாமின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: சனாதன விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதிக்கு, பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்கவேண்டும் என்று பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உதயநிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி பெங்களூருவை சேர்ந்த பரமேஷ் பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kx5jht6j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த 8 வழக்குகளும் வெவ்வேறு மாநிலங்களில் தொடரப்பட்டுள்ளதால் இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே இடத்தில் விசாரிக்க உத்தரவிடக்கோரி உதயநிதி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக உதயநிதியுடன், சனாதன எதிர்ப்பு மாநாட்டை நடத்திய வெங்கடேஷ், ஆதவன் மற்றும் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி பெங்களூருவை சேர்ந்த பரமேஷ் பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உதயநிதி ஆஜர்

இதற்கு எதிராக வெங்கடேஷ், ஆதவன் மற்றும் மதுகூர் ராமலிங்கம் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் நடவடிக்கைக்கு தடை கோரி கடந்த வாரம் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணா எஸ் தீக்சித், இந்த வழக்கில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி நேரில் ஆஜராக நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜூன் 25) காலை நீதிபதி கே.என்.சிவகுமார் முன்பு ஆஜரானார்.

ஒத்திவைப்பு

அப்போது உதயநிதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவருக்கு ஜாமின் வழங்க கோரிக்கை வைத்தும், வழக்கில் நேரில் ஆஜராக நிரந்தர விலக்கு கோரியும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட உதயநிதிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கும் மனு மீதான விசாரணை முடிந்த பிறகு, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தார். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Rvn
ஜூன் 26, 2024 09:01

அர்ரெஸ்ட் செய்ய வேண்டும் .


kumarkv
ஜூன் 25, 2024 21:14

சிறை வாசமோ அல்லது பதவி நடக்கும்


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 25, 2024 21:02

கிருத்துவ மதத்திற்கு மாறி, ஹிந்துக்களை கேவலப்படுத்துபவருக்கு மீண்டும் வோட்டை போட்ட தமிழக அறிவாளி மான.....ட , வெட்டகம் கேட்ட ஹிந்துக்களை என சொல்லி திட்டுவது?


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 18:36

ஜாஃபர் மட்டும் உள்ளே. கூட்டாளி வெளியே. நீதி அப்படி.


Venkateswaran Ramamoorthy
ஜூன் 25, 2024 17:24

தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ✍️ தயவுசெய்து


Narayanan
ஜூன் 25, 2024 16:05

உதயநிதியையும் கேஜ்ரிவால் மாதிரி ஜெயிலில் போட்டு இருக்கவேண்டும்


Raj Kamal
ஜூன் 26, 2024 17:23

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.


கூமூட்டை
ஜூன் 25, 2024 15:53

இது கூமூட்டை திராவிட செம்பு மாடல்


சத்திய சாயி
ஜூன் 25, 2024 15:49

நம் நாட்டில் நீதி செத்து பல காலங்கள் ஆகிவிட்டது


V RAMASWAMY
ஜூன் 25, 2024 15:42

அனைத்துலக ஹிந்துக்களுக்கு எதிரான தவறாகப் பேசிய இந்த அமைச்சருக்கு இனி, அவர் சார்ந்த திராவிட காட்சிகளை சேர்ந்தவர்கள் இம்மாதிரி நடந்துகொள்ளாவண்ணம்தக்க தண்டனை கொடுத்தால் தான் இந்துக்களுக்கு நீதி வழங்கியது போலாகும்.


venkat venkatesh
ஜூன் 25, 2024 14:49

he is against hindus


Ravichandran S
ஜூன் 26, 2024 04:59

அவர் ஒரு மதம் மாறிய கிறிஸ்துவர் என அவரே பொதுமேடையில் ஒப்புக் கொண்டு விட்டார். பெயர் மாற்றம் இல்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை