உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், கடந்த 2018ல் பணி நியமனம் செய்யப்பட்டார். 2021ல் அவருக்கு மூன்றாண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவருக்கு மீண்டும் ஒரு முறை பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எதிர்பார்ப்பு இருந்தது. சக்தி காந்ததாஸ் பதவிக்காலம் நாளை நிறைவு பெறும் நிலையில், புதிய கவர்னர் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=47dgjknh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ரிசர்வ் வங்கியின் 26 வது கவர்னராக பொறுப்பேற்கிறார்.ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா, 1990 ராஜஸ்தான் பேட்சை சேர்ந்தவர். அவர், தற்போது நிதித்துறையில் வருவாய் செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் ரிசர்வ் வங்கியில் 3 ஆண்டுகாலம் பணியாற்றுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
டிச 10, 2024 16:41

பரவாயில்லை. இவுரு அமெரிக்காவுல Princeton ல இங்கிலீஷ் மீடியத்தில் படிச்ச்ட்டு வந்தவர். மானத்த காப்பாத்துவாருன்னு நம்பலாம்.


K srinivasan
டிச 09, 2024 20:33

அது நகர்வாலா . மல்ஹோத்ரா இல்லை


ஆரூர் ரங்
டிச 10, 2024 11:08

ஸ்டேட் வங்கி ஊழியர் மல்ஹோத்ரா. அவருக்கு இந்திரா போன் செய்து நகர்வாலா மூலம் பணம் கொடுத்து அனுப்பும்படி கூறினார் என்பது குற்றச்சாட்டு. வங்கியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட மல்ஹோத்ராவுக்கு உடனே தனது நிறுவனத்தில் காசாளர் வேலை கொடுத்தார் சஞ்சய் காந்தி.


MUTHU
டிச 09, 2024 19:05

பேரு பெத்த பேரு. தாக நீலு லேது. பேருதான் RBI கவர்னர். சம்பாத்தியம் நம்ம ஊரு வார்டு மெம்பெர் அளவு கூட இருக்காது.


sankaranarayanan
டிச 09, 2024 18:23

இந்திரா ஆட்சியில்தான் மல்ஹோத்ரா என்ற ஸ்டேட் வாங்கி பார்லிமெண்டு தெரு, ஊழியர் 75 லட்சம் பணம் கொண்டுவந்து காங்கிரஸிடம் கொடுக்க பெரிய பூகம்பமே வெடித்தது இப்பொது அந்த பெயர்மட்டும்தான் உள்ள நபர் வரப்போகிறார் ஆனால் இவர் கண்ணியமானவர் அனுபவசாலி நல்ல உழைப்பாளி நாட்டிற்கு இத்தருணத்தில் இவருடைய சேவை இன்றியமையாதது


K srinivasan
டிச 09, 2024 20:35

மல்ஹோத்ரா இல்லை . நகர்வாலா .


vijay
டிச 09, 2024 22:00

அது நகர்வாலா, மல்ஹோத்ரா இல்லைப்பா.


புதிய வீடியோ