உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்க முன்னுரிமை : உச்சநீதிமன்றம் உத்தரவு

போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்க முன்னுரிமை : உச்சநீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் நாடு முழுவதும் அதிகரித்து வருவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெலா எம் திரிவேதி மற்றும் பிபி வரலே அமர்வு கூறியதாவது: போக்சோ வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள், அதன் தீவிரத்தை உணர செய்யவும், போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்கு என தனி நீதிமன்றங்கள் அமைப்பதற்கும் மத்திய மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டு உள்ள காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுடன், குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும். மத்திய அரசு நிதியுதவி உடன், பல மாநிலங்கள் போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்து இருந்தாலும், தமிழகம், பீஹார், உ.பி., மேற்கு வங்கம், ஒடிசா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், போக்சோ நீதிமன்றங்கள் தேவைப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை