உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்போசிஸ் இணை நிறுவனர் மீது எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை வழக்கு

இன்போசிஸ் இணை நிறுவனர் மீது எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை வழக்கு

பெங்களூரு, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில், இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 17 பேர் மீது, கர்நாடக போலீசார் எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.கர்நாடக மாநிலம், பெங்களூரில் ஐ.ஐ.எஸ்.சி., எனப்படும் இந்திய அறிவியல் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு போவி என்ற பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பேராசிரியராக பணியாற்றினார். இவர் 2014ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து அப்போது இந்திய அறிவியல் நிறுவன வாரிய உறுப்பினராக இருந்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் மீது போலீசில் புகார் அளித்தார். அதில், 'என் மீது கோபாலகிருஷ்ணன் மற்றும் சிலர் பொய் குற்றச்சாட்டுகளை கூறி பணி நீக்கம் செய்தனர். மேலும் என்னை ஜாதி ரீதியாக துன்புறுத்தி அச்சுறுத்தல் விடுத்தனர்' என கூறியிருந்தார். ஆனால் போலீசார் வழக்கு பதியாமல் இருந்தனர். இதையடுத்து பெங்களூரு 71வது மாநகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்படி இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் நிறுவன முன்னாள் இயக்குனர் பலராம் உட்பட 17 பேர் மீது போலீசார் எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை