உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளி முதல்வரை சுட்டுக் கொன்ற 12ம் வகுப்பு மாணவன்! ம.பி.யில் பயங்கரம்

பள்ளி முதல்வரை சுட்டுக் கொன்ற 12ம் வகுப்பு மாணவன்! ம.பி.யில் பயங்கரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்தியப்பிரதேசத்தில் பள்ளி முதல்வரை 12ம் வகுப்பு மாணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி போலீசார் கூறி உள்ளதாவது; சத்தர்பூர் மாவட்டத்தில் தமோரா அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முதல்வர் சக்சேனா, 55. கடந்த 5 ஆண்டுகளாக இந்த பள்ளியில் உள்ளார். சம்பவத்தன்று பள்ளியின் கழிவறை அருகே அவர், அதே பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அவரது தலையில் குண்டுபாய, ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில நிமிடங்களில் கொல்லப்பட்ட முதல்வரின் ஸ்கூட்டரில், ஒருவருடன் மாணவர் தப்பிச் சென்றிருக்கிறார். சக்சேனாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார். என்ன காரணத்துக்காக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை. 12ம் வகுப்பு மாணவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்றும் தெரியவில்லை. தப்பியோடிய மாணவரை தேடி வருகிறோம். அவர் பிடிபட்டால் தான் முழு விவரங்களும் தெரியவரும்.இவ்வாறு போலீசார் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

nisar ahmad
டிச 07, 2024 14:16

பஜக இந்த நாட்டை ஆளும் வரை இந்த நாடு நாசமாக போவது உறுதி.


RAMAKRISHNAN NATESAN
டிச 07, 2024 06:17

தனிப்பட்ட விரோதத்தில்தான் கொலைகள் நடக்கின்றன என்று தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்காக உருட்டுகிறோமே ..... இது எப்படிங்க ????


Senthoora
டிச 07, 2024 03:01

நல்லகருத்தை சொன்னிங்க, திராவிட மடல் என்று இல்லாமல், அதுசரி அமெரிக்காவில் தான் சிறுவர்களுக்கு துப்பாக்கி சுலபமாக கிடைக்கும், இந்த பசங்களுக்கு எப்படி கிடைத்தது, முதலில் அதைத்தான் தேடணும்.


வைகுண்டேஸ்வரன்
டிச 07, 2024 02:48

இதுவே தமிழ் நாட்டில் நடந்திருந்தால் திராவிட மாடல், விடியல், ஆரியர், இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூவியிருப்பார்கள். என்று 2 முறை பதிவிட்டுவிட் டேன்


பாமரன்
டிச 06, 2024 23:00

காரணம் என்னவாக இருந்தாலும் அவலம் எங்க நடந்தாலும் கண்டிக்கனும்.. அரசியல் வியாதிகள் மற்றும் அவர்களின் ஊதுகுழல் குரல்களை விடுவோம்.. இனி இதுபோன்று நடக்காமாலிருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்னு நம்புவோம்...


அப்பாவி
டிச 06, 2024 22:01

துப்பாக்கி கலாச்சாரம் அதிகமாயிடிச்சு. நாளை அண்ணாமலை, முருகன் , கெவுனர் எல்லோரும் வேதனை ஸ்ட்டேட்மெண்ட் குடுப்பாங்களா?


Ramesh Sargam
டிச 06, 2024 21:06

துப்பாக்கி சூடு விவகாரத்தில் அமெரிக்காவை இந்தியா மிஞ்சிவிடுவோம் போல இருக்கு. மத்திய அரசு உடனே இதற்கு ஒரு நிரந்தர முடிவு காணவேண்டும். இல்லையென்றால் அமெரிக்கர்கள் இந்தியாவை பார்த்து எள்ளி நகையாடுவார்கள்.


Anantharaman Srinivasan
டிச 06, 2024 20:09

என்ன வைகுண்டா shock ஆயிடிங்க.. ஆரியன், திராவிடன் கண்ணுக்கு தெரியலையா..??


வைகுண்டேஸ்வரன்
டிச 07, 2024 02:46

அட ஏன் சார், நீங்க வேற. நான் திராவிடர், விடியல், ஆரியர் எல்லாம் quote பண்ணி தான் கருத்து போட்டேன். சென்சார் பண்ணிட்டாங்க.


ஸ்ரீகாந்த்
டிச 06, 2024 19:46

மாணவரா மர்ம நபரா?


வைகுண்டேஸ்வரன்
டிச 06, 2024 19:46

ம. பி. என்பதால் இங்கே யாரும் எதுவும் எழுதவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை