உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் காலத்தில் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள் பறிமுதல்: 2வது இடத்தில் தமிழகம்

தேர்தல் காலத்தில் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள் பறிமுதல்: 2வது இடத்தில் தமிழகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் காலத்தில் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. தமிழகத்தில் ரூ.150 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 16 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பணம் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன. தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், அதிகளவில் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் குறித்து பறக்கும் படையினர் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தன.இந்நிலையில், மே 30 அன்று வரை தேர்தல் காலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.1,100 கோடி ரொக்கம் மற்றும் தங்கம் நகைகள் பறிமுதல் செய்துள்ளனர். பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட பட்டியலில் டில்லி மற்றும் கர்நாடகா முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளன. அங்கு ரூ.200 கோடி பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அடுத்து 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. 150 கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஆந்திரா, ஒடிசா மற்றும் தெலுங்கானாவில் ரூ.100 கோடி அளவு பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தேர்தல் காலத்தில் இந்தளவு பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். கடந்த 2019ம் ஆண்டை காட்டிலும் 182 சதவீதம் கூடுதல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 2019 ல் ரூ.390 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

D.Ambujavalli
ஜூன் 01, 2024 06:13

கல்யாணம், சுற்றுலா, வியாபாரிகள் என்று ‘பறி முதல்’ செய்தது மட்டுமே இவ்வளவு பெரிய தலைகள், ஆளும் கட்சி வேட்பாளர்கள் கொண்டு சென்ற சூட்கேஸ்களைக் கணக்கிட்டிருந்தால் இதைப்போல் பல மடங்கு பிடித்திருக்கலாமே


Azar Mufeen
ஜூன் 01, 2024 02:58

தமிழக பிஜேபிக்கு கொடுத்த 600கோடியை பிடிப்பட்டிருந்தால் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்திரிக்கும், என்ன செய்ய அவா மேல கைவைக்க முடியுமோ?


sankaranarayanan
மே 31, 2024 21:14

மத்திய அரசுக்கு நல்ல வருமானம் இதை திரும்ப யாருக்குமே கொடுக்காமல் மக்களுக்காகவே நற்பணிகளுக்காகவே பயன்படுத்த வேண்டும்


இராம தாசன்
மே 31, 2024 20:34

என்ன கொடுமை சார் - இதில் கூட நம் விடியல் ஆட்சி முதல் இடம் இல்லையா? பாருக்குள்ளேBAR நல்ல நாடு நம் தமிழ் நாடு இல்லையா?


Kasimani Baskaran
மே 31, 2024 18:45

உபிஸின் கதறலைப்பார்த்தால் பிடிக்காமல் விட்டே இப்படி என்றால் பிடித்திருந்தால் அமெரிக்க ஜிடிபியில் பத்து சதவிகிதம் வந்திருக்கும் போல.


என்றும் இந்தியன்
மே 31, 2024 17:56

என்ன ஸ்டாலின் இது இதில் கூடவா டாஸ்மாக்கினாடு முதலிடம் பெறவில்லை ஐயோ ஐயோ


RAMAKRISHNAN NATESAN
மே 31, 2024 16:47

ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி ..... பிசினஸ் செய்த பணத்தை பிசினஸில் போடுவது போல கொள்ளையடித்த பணத்தின் ஒரு பகுதியை வாக்காளர்களிடம் வீசி எறிந்து மீண்டும் ஆட்சிக்கு வர முயலும் கொள்ளைக்கும்பல் .... வாக்குப்பெட்டி முறை, வாக்குப்பதிவு சரிபார்த்தல் போன்ற சீர்திருத்தங்கள் வந்ததில் இருந்து முறைகேடு செய்ய முடியாததால் வயிறெரிந்து பாஜகவை ஈவிஎம் விஷயத்தில் குறை சொல்கிறார்கள் .....


venugopal s
மே 31, 2024 16:33

செய்தியில் குறிப்பிட்டுள்ள மாநிலங்கள் எல்லாமே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள். பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லாமே சுத்தபத்தமானவை போல் உள்ளது!


RAMAKRISHNAN NATESAN
மே 31, 2024 16:43

உங்க திராவிட மாடல் எப்படி ???? இதுல மத்தவங்களை குறை சொல்லக்கூடாது ....


UTHAMAN
மே 31, 2024 18:40

ஆம் . அவர்கள் சுத்தமாகவும் தான்.


தமிழன்
மே 31, 2024 15:23

இது மக்களுக்கு தர வேண்டிய பணம். அதனால் இதனை மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். இவுங்களும் கொடுக்க மாட்டாங்க.. கொடுக்கிறவாங்களையும் கொடுக்க விட மாட்டாங்க..


Azar Mufeen
மே 31, 2024 15:16

பிஜேபினா சூரத் பார்முலா


UTHAMAN
மே 31, 2024 18:41

திருட்டு திராவிஷ மாநிலங்கள்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ