உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 36 எம்.எல்.ஏ.,க்கள், 39 தொண்டர்கள் கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு தேர்வு: துணை முதல்வர் சிவகுமார் தகவல்

36 எம்.எல்.ஏ.,க்கள், 39 தொண்டர்கள் கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு தேர்வு: துணை முதல்வர் சிவகுமார் தகவல்

பெங்களூரு : ''கார்ப்பரேஷன், வாரியங்களில் 36 எம்.எல்.ஏ.,க்கள், 39 தொண்டர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது, என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.பெங்களூரின், விதான்சவுதா வளாகத்தில், நேற்று அவர் கூறியதாவது:எந்த நொடியிலும், கார்ப்பரேஷன், வாரியங்கள் நியமன பட்டியல் வெளியாகும். எங்கள் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தது தொண்டர்கள். அவர்கள் உரிமைப்படி அவர்களுக்கு பதவி வழங்கப்படுகிறது. கார்ப்பரேஷன், வாரியங்களில் 36 எம்.எல்.ஏ.,க்கள், 39 தொண்டர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் தொடர்பாக, காங்கிரஸ் தேர்தல் கமிட்டி கூட்டம், இன்று மாலை 4:30 மணிக்கு, குயின்ஸ் சாலையில் உள்ள இந்திரா காந்தி பவனில், நடக்கவுள்ளது. முதலில் மதியம் கூட்டம் நடத்த ஆலோசித்தோம். பிரதமர் மோடி, கர்நாடகாவுக்கு வருகை தருவதால், மாலை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிட்டியில் உள்ளவர்கள் பங்கேற்பர். அமைச்சர்கள் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று, கருத்து சேகரித்துள்ளனர். இது குறித்து ஆலோசிக்கப்படும்.லோக்சபா தேர்தலில் போட்டியிடும்படி, கட்சி மேலிடம் எனக்கு உத்தரவிட்டால், நான் போட்டியிட்டு தான் ஆக வேண்டும். அதேபோன்று அமைச்சர்களும் களமிறங்க வேண்டும்.பா.ஜ.,வுடன் ம.ஜ.த., கூட்டணி வைத்திருப்பது, அந்த கட்சியின் விருப்பம். இதற்கு முன் நாங்கள், ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைத்து களமிறங்கிய போது, அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என, நினைத்தோம்.ஆனால் காங்கிரஸ், ம.ஜ.த., தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இம்முறை பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளனர். என்ன நடக்கிறது என, பொறுத்திருந்து பார்க்கலாம். நாங்கள் 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.ராமர் கோவில் விஷயத்தில், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என, பா.ஜ.,வினர் கூறுகின்றனர். சித்தராமையா பெயரிலேயே, ராமன் உள்ளார். என் பெயரில் சிவன் இருக்கிறார். மதத்தின் மீது எங்களுக்கும் நம்பிக்கை உள்ளது. ராமர் கோவில் விஷயத்தால், எங்களுக்கு பின்னடைவு ஏற்படாது. ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசியலில் தர்மம் இருக்க வேண்டுமே தவிர, தர்மத்தில் அரசியல் இருக்க கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ