உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனித்தனியாக அனுப்புங்க; கூட்டு ராஜினாமா செல்லாது: டாக்டர்களுக்கு மம்தா அரசு கெடுபிடி!

தனித்தனியாக அனுப்புங்க; கூட்டு ராஜினாமா செல்லாது: டாக்டர்களுக்கு மம்தா அரசு கெடுபிடி!

கோல்கட்டா: 'மருத்துவர்களின் கூட்டு ராஜினாமா செல்லாது, ஒவ்வொரு மருத்துவரும் தனித்தனியாக ராஜினாமா கடிதம் அனுப்ப வேண்டும்' என மேற்கு வங்க மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.மேற்கு வங்கம் மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லுாரி பயிற்சி மருத்துவ மாணவி கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அந்த மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மருத்துவர்கள் நடத்தும் போராட்டம் இன்னும் முடிந்தபாடில்லை. மருத்துவர்கள் சிலர் தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, 50க்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர்.மருத்துவர்கள் ராஜினாமா செய்தது மம்தா தலைமையிலான மாநில அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசு தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:அரசு மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா செய்தது குறித்து, அரசின் மூத்த ஆலோசகர் ஆலப்பன் பந்த்யோபத்யாய் தலைமையில் ஆலோசித்தோம். பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களின் கூட்டு ராஜினாமா சட்டப்படி செல்லாது. ஒவ்வொரு மருத்துவரும் தனித்தனியாக, எத்தனை ஆண்டுகள் பணியாற்றி வந்தனர் என்ற விவரத்துடன் ராஜினாமா கடிதத்தை, அவரவர் முகவரியுடன் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
அக் 12, 2024 20:32

தனித்தனியாக அனுப்பினால், அவர்களை தனித்தனியாக கூப்பிட்டு, மிரட்டி அவர்கள் ராஜினாமா கடிதத்தை வாபஸ் வாங்க இப்படி கோருகிறார் மமதா. மமதா பலே கில்லாடி.


sankaranarayanan
அக் 12, 2024 18:53

ராஜினாமா கடிதத்தை மருதுவர்கள் தனித்தனியாக அனுப்பினால் என்ன கூட்டாக அனுப்பினால் இவர்க்கு என்ன ராஜினாமா செல்லாது என்று சொல்ல இருக்கு லாயக்கே இல்லை நீதி மன்றங்கள் சொன்னால் சரி எ நீ அரசே இருக்கிறதா இல்லையா என்ற நிலைமை இருக்கும்போது சீக்கிரமே இவரே ராஜினாமா செய்தால்தான் இதற்கு முடிவே காணப்படும் அதுவரை அங்கே மக்கள் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை