உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலைக்கார பெண் கடத்தல் வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமின்

வேலைக்கார பெண் கடத்தல் வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில் கைதான மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.,வும் மாஜி பிரதமர் தேகவுடா மகனுமான ரேவண்ணாவுக்கு கோர்ட் ஜாமின் வழங்கியது.ஹாசன் ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. வேலைக்கார பெண்ணை கடத்திய வழக்கில், கடந்த 4 ம் தேதி கைது செய்யப்பட்டார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கேட்டு எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கு தொடர்பான நீதிமன்றத்தில், ரேவண்ணா தரப்பில் மனு செய்யப்பட்டது. முன்னதாக அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜாமின் மனு மீதான விசாரணையும் இன்று நடந்தது. ரேவண்ணா தரப்பில் வக்கீல் நாகேஷ் ஆஜரானர். இதில் ஜாமின் வழங்க சிறப்பு புலனாய்வு குழு எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சந்தோஷ் பட், ரூ. 5 லட்சம் பிணை பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜாமி்ன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

செந்தில்
மே 14, 2024 10:34

ஜாமீன் எல்லாம் காமெடியாப் போச்சு.


Ramesh Sargam
மே 13, 2024 21:25

இந்தியாவில் அரசியல்வாதிகள் தவறு செய்தால் தண்டிக்கப்படவே மாட்டார்கள் நம் இந்திய நாட்டின் சட்டம் அப்படி வெட்கம் வேதனை


தாமரை மலர்கிறது
மே 13, 2024 21:16

பொய் புகார்களை தகர்த்தெறிந்து ஜாமினில் வெளியே வந்து ரேவேன்னா அவரது நேர்மையை நிரூபிப்பார்


vaiko
மே 14, 2024 00:17

உன் வீட்டு பெண்களையும் ரெவென்ன குடும்பம் வைத்து செய்து இருக்கும் என்று பயப்படுகின்றாயா


sankaranarayanan
மே 13, 2024 20:59

இந்தியாவில் ஜமீந்தார்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் இப்போது ஜாமீன்தார்கள் வாழ்கிறார்களாம் ஜமீன்தாரும் நீதிமன்றத்தால் வழங்கப்போட்ட ஜாமீன்தார்களும் ஒரே மாதிரியான போக்கில்தான் வாழ்கிறார்கள் இருவருக்கும் வித்தியாசமே கிடையாது இருவர்க்கும் எல்லா சலுகைகளும் உண்டு ராஜ போக யோகம் அரசு காவல் அரசு மரியாதை இன்னும் என்னய்யா இவர்களுக்கு வேண்டும்


Syed ghouse basha
மே 13, 2024 20:46

நாட்டை வெள்ளைகாரன் ஆட்சி செய்த போது யாராக இருந்தாலும் விசாரித்து தன் விருப்பபடி தான் விரும்பியதை தீர்ப்பாக கொடுப்பான் அது போல சரித்திரம் திரும்புதோ?


Ramesh Sargam
மே 13, 2024 20:25

இனி அவ்வளவுதான் அவருக்கு தண்டனை எதுவும் கிடைக்காது


Jose Varghese
மே 13, 2024 20:17

கடத்தல் குற்றத்திற்கு உடனே ஜாமீன் இந்தியா வாழ்க


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை