உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை: எம்.பி., கவலை

ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை: எம்.பி., கவலை

புதுடில்லி : ரயிலில் பயணம் செய்யும் பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து, ராஜ்யசபாவில் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். ராஜ்யசபாவில் நேற்று, மார்க்சிஸ்ட் எம்.பி., சீமா பேசியதாவது: ரயிலில் பயணிக்கும் பெண்கள், பல்வேறு பிரச்னைக்கு ஆளாகின்றனர். பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

சமீபத்தில், கேரளா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் ரயில்களில் நடந்த சம்பவங்கள், இதை உறுதிப்படுத்தியுள்ளன. ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு, போதிய பாதுகாப்பு இல்லை. ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு, ரயில்வே பாதுகாப்பு படைக்கு உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள இடங்களை, விரைவில் நிரப்ப வேண்டும். இவ்வாறு சீமா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை