உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சகோதரர் ஜெகன் மீது ஷர்மிளா பாய்ச்சல்

சகோதரர் ஜெகன் மீது ஷர்மிளா பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா : ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் காங்., முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன். ஜெகனின் சகோதரி ஷர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தார். இதை கலைத்துவிட்டு சமீபத்தில் காங்கிரசில் இணைந்தார்.இதையடுத்து ஷர்மிளாவை ஆந்திர மாநில காங்., தலைவராக கட்சி தலைமை நியமித்தது. இந்நிலையில் நேற்று கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஷர்மிளா காங்., மாநில தலைவராக பதவியேற்றார்.

இதன்பின் ஷர்மிளா பேசியதாவது:

ராஜசேகர ரெட்டி இரண்டு முறை காங்., மாநில தலைவராகவும், முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். மீண்டும் அவரது மகள் ஷர்மிளாவான என்னை நம்பி, கட்சி தலைமை பொறுப்பை வழங்கியுள்ளது.அவர்களது நம்பிக்கையை பூர்த்தி செய்வேன். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அதற்கு முந்தைய தெலுங்கு தேசத்தின் 10 ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. இந்த இரு ஆட்சிகளும் ஆந்திராவை 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் தள்ளியுள்ளன. தற்போது ஆட்சியில் உள்ள ஜெகன் ஆட்சியில் சாலை அமைப்பதற்கோ, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட நிதியில்லை. மாநிலத்தில் ஒரு நகரத்தில் கூட மெட்ரோ ரயில் வசதி இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Barakat Ali
ஜன 22, 2024 16:49

காங்கிரஸ் இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் ..... இவர் அதிமுகவில் இருந்தவர் .... இளங்கோவன் துவக்கம் முதலே திமுக ஆதரவாளராக இருந்தவர் ... தாயும் மகனும் எப்படிப்பட்ட வார்த்தைகளை பரிமாறிக்கொண்டனர் என்று இணையத்தில் பாருங்கள் ...


Matt P
ஜன 22, 2024 10:01

சகோதரியெல்லாம் அப்பப்ப அண்ணனை திட்டிக்குங்குவாங்க. எல்லாம் ஒரு பாசம் தான்.


GoK
ஜன 22, 2024 08:56

பிரித்து ஆள்வதில் இந்த காங்கிரஸ் அடிச்சுக்க ஆளு இல்லை


vbs manian
ஜன 22, 2024 08:54

காங்கிரஸ் சூழ்ச்சி வலையில் வீழ்ந்து விட்டார்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 22, 2024 11:17

சாரி சார் ...... நீங்க கொஞ்சம் அப்பாவி ..... இதெல்லாம் பிசினஸ் அண்டர்ஸ்டாங்டிங் ....


கலிவரதன்,திருச்சி
ஜன 22, 2024 08:00

தமிழகத்திலும் இது போன்ற காட்சிகள் கூடிய விரைவில் நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கலாம்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 22, 2024 07:59

தனி கட்சி நடத்துனப்ப ஏன் எதிர்த்து கேள்வி கேட்கலை ??


Barakat Ali
ஜன 22, 2024 15:25

அக்காவுக்கு காங்கிரசில் சேர்ந்த பிறகுதான் வீரமே வருதாம் ....


Ramesh Sargam
ஜன 22, 2024 07:16

குடும்பம் ஒன்று. கட்சிகள் பல. பயன் எல்லோருக்கும் (குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்). ஒன்று. மக்கள் ஏமாளிகள்


Kasimani Baskaran
ஜன 22, 2024 05:34

குடும்ப ஆட்சியால் அந்தந்த குடும்பத்தைத்தவிர யாருக்கும் பயனில்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை