உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சசி தரூர் - - காங்., நிர்வாகிகள் இடையே முற்றுகிறது மோதல்

சசி தரூர் - - காங்., நிர்வாகிகள் இடையே முற்றுகிறது மோதல்

திருவனந்தபுரம் : கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி காங்., எம்.பி.யாக இருப்பவர் சசிதரூர். இவருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிபோர் நடக்கிறது. நெருக்கடி நிலை குறித்து பிரதமர் இந்திராவை விமர்சித்து சசிதரூர் எழுதிய கட்டுரைக்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த மோதல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், 'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரத்தில் உச்சகட்டத்தை எட்டியது. 'ஆப்பரேஷன் சிந்துார்' தொடர்பாக அமெரிக்காவுக்கு சென்ற அனைத்து கட்சி குழுவுக்கு தலைமை தாங்கிய சசிதரூர், 'கட்சிகளை விட தேச நலனே முதன்மையானது என்ற நிலைப்பாட்டை என் கட்சியினரே துரோகமாக பார்க்கின்றனர்' என, கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். இது, காங்., நிர்வாகிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காங்., மூத்த தலைவர் கே.கருணாகரனின் மகனும், முன்னாள் எம்.பி.,யுமான முரளிதரன் கூறியதாவது: தன் நிலைப்பாட்டை சசிதரூர் மாற்றிக்கொள்ளும் வரை திருவனந்தபுரத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கும் அவர் அ ழைக்கப்பட மாட்டார். அவர் எங்களுடன் இ ல்லை. அவர் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறார் என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்., காரிய கமிட்டி உறுப்பினராக இருக்கும் அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை தேசிய தலைமை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ