உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமருக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!

பிரதமருக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!

புதுடில்லி: ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் பிரதமர் மோடியை சசிதரூர் மீண்டும் பாராட்டியிருப்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி., சசிதரூர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர். இதனால் இவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பாளர்கள் அதிகம். முன்னாள் மத்திய அமைச்சரான இவர், சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பை பாராட்டினார். இதற்கு காங்., கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=401ipvz2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தொடர்ந்து, கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசை பாராட்டிய சசிதரூர், கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் செல்பி எடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைமையை மேலும் வெறுப்பேற்றினார். இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் பிரதமர் மோடியை சசிதரூர் மீண்டும் பாராட்டி உள்ளார்.இது குறித்து சசி தரூர் கூறுகையில், 'கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை விமர்சித்தவர்களில் நானும் ஒருவன். அதனால், ஏற்பட்ட கரையை இன்னமும் நான் துடைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். உக்ரைன், ரஷ்யா அதிபர்களை கட்டித் தழுவிய பிரதமர் மோடி, சமாதானத்தை வலியுறுத்தினார்,' என்றார். இதன்மூலம், ஒரே மாதத்தில் பிரதமர் மோடியை சசிதரூர் 2வது முறையாக பாராட்டியுள்ளார். இது குறித்து பா.ஜ., ஐ.டி., பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறுகையில், ' சர்வதேச அளவில் பிரதமர் மோடியின் அந்தஸ்தை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொண்டதை பார்க்கையில் திருப்தியளிக்கிறது. சசிதரூரின் கருத்தால் ராகுலின் முகம் சிவந்து போயிருக்கும். பிரதமரை பாராட்டிய சசிதரூர் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காது என்று நம்புகிறேன்,' எனக் கூறினார்.சசி தரூர் இப்படி தொடர்ந்து பிரதமரை பாராட்டி வருவது, காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

pmsamy
மார் 20, 2025 07:06

நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் உலக நாடுகளுக்கு சுற்றுலா போகும் மோடி அதற்கு எதுக்கு பாராட்டு


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 20, 2025 08:46

ஆமாம் நீங்கள் சொல்வது சரி தான். தினம் தினம் புது புது வடிவில் போக்சோ செய்திகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வந்து கொண்டு உள்ளது. வாரத்தில் இரண்டு மூன்று வித விதமான கொலைகள் சினிமா கூத்தாடி ஹீரோக்கள் சினிமாவில் செய்வது போல் நிஜத்தில் நடந்து கொண்டு உள்ளது. கஞ்சா போதை பொருட்கள் தாராளமாக மார்கெட்டிங் செய்து கொண்டு உள்ளார்கள். டாஸ்மாக் விற்பனை எப்படி அதிகரிக்கலாம் என்று ரூம் போட்டு ஆலோசித்து விற்பனை வளர்ச்சி படு வேகமாக உயர்ந்து கொண்டு உள்ளது. இதையெல்லாம் கவனிக்காமல்...


kumarkv
மார் 20, 2025 18:00

சரி உனக்கு கொடுப்போம்


naranam
மார் 19, 2025 20:49

உக்ரைன் நாட்டின் மீது அணு ஆயுதங்களை பிரயோகிக்க கூடாது என்று பிரதமர் மோடி ரஷ்யா அதிபர் புடினிடம் உறுதியாகத் தெரிவித்ததாக சமீபத்தில் போலந்து நாட்டின் பிரதமர் கூறியிருக்கிறார். நம் நாட்டிலுள்ள மோடி எதிர்ப்பாளர்கள் இப்பொழுதாவது அவருடைய அறிவுக் கூர்மையையும் அரச தந்திரத்தில் அவருடைய திறமைகளையும் உலக அரங்கில் அவருக்கு இருக்கும் மதிப்பையும் புரிந்து கொள்வார்களா?


Ramesh Sargam
மார் 19, 2025 20:24

சசியின் சமீபகால போக்கு காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த தலைவலி கொடுக்கிறதாம். கட்சியில் வைத்திருக்கவும் முடியாத சூழ்நிலை, கட்சியை விட்டு துரத்தவும் முடியாத சூழ்நிலை.


M Ramachandran
மார் 19, 2025 20:05

ராகுலின் ஆசை விரோத பேச்சுகளை காங்கரஸ் ஆதரிக்கும் போது சசி தரூர் நாட்டின் பிரதமர் அயல் நாடு விவகாரத்தில் முதிர்ச்சி அடைந்த பிரதமர் தம் பங்கை அளித்ததை பாராட்டியிருக்கிறார். காங்கரசும் ராகுலும் தங்கள் போக்கை மாற்றி கொள்ளா விட்டால் பலர் சசி தரூர் போல் இது போன்ற கருத்தை வெளியிடக்கூடும்.


பேசும் தமிழன்
மார் 19, 2025 18:31

சட்டு... புட்டுன்னு கட்சி மாறுவதை வி்ட்டு...இதென்ன விளையாட்டு ??


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
மார் 19, 2025 18:10

உக்ரைன் ரஷ்யா போரில் அல்லது சமாதானத்தின் இந்தியாவின் பங்கு ஏதுமில்லை. சசி அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.


guna
மார் 19, 2025 18:27

பாய்...உன் கருத்தையும் இங்கே யாரும் மதிக்கல , அப்படி ஓரமா போய் கருத்து போடு....


பேசும் தமிழன்
மார் 19, 2025 18:33

விளாடிமிர் புடின் அவர்களின் பேட்டியை படித்து பார்.... அப்போதாவது உங்கள் டாஸ்மாக் மூளைக்கு எட்டுகிறதா என்று பார்க்கலாம்.


Appa V
மார் 19, 2025 18:40

பொதுவா அவலை நினைத்து தான் உரலை இடிப்பது வழக்கம்


Balaa
மார் 19, 2025 18:46

மிகச்சரி., அதற்கு திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் பங்கு தான் இருக்கிறது. யார் அவரு. ரஷ்யாவிலிருந்து இந்திய மாணவர்களை டில்லிக்கு அழைத்து வந்த பிறகு , அவர்களை மிகவும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்தவராச்சே...


Bhakt
மார் 19, 2025 20:13

ஆமாம் உக்ரைன்ல இருந்து டைரெக்டா பேருந்து மூலம் தமிழக மாணவர்களை சென்னை அழைத்து வந்தவர் நம் நைனா


கொல்ட்டி பற்றாளன், கட்டுமரநகர் ஓங்கோல்
மார் 19, 2025 21:00

அது கெடக்கட்டும் பூபதி அறிவாலயத்தில் இன்னும் அதே அலுமினிய தட்டுதானா


TRE
மார் 19, 2025 18:07

பிரதமருக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு -


புதிய வீடியோ