உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3வது முறையாக ராகுலின் சந்திப்பை தவிர்த்த சசி தரூர்; காங்கிரஸ் நிர்வாகிகள் அப்செட்

3வது முறையாக ராகுலின் சந்திப்பை தவிர்த்த சசி தரூர்; காங்கிரஸ் நிர்வாகிகள் அப்செட்

புதுடில்லி : பார்லி வளாகத்தில் ராகுல் தலைமையில் நடந்த காங்கிரஸ் எம்பிக்களின் கூட்டத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் புறக்கணித்தது, அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி எம்பியுமான சசி தரூர், 69, சமீப காலமாகவே பிரதமர் மோடியையும், பாஜவையும் புகழ்ந்து வருகிறார். இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க காங்கிரசின் எதிர்ப்பையும் மீறி வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து கட்சி குழு கூட்டத்தில் சசி தரூர் இடம்பெற்றார்.மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டுவதை வழக்கமாக கொண்ட சசி தரூர், காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளை சந்திப்பதையும் தவிர்த்து வருகிறார்.இந்த நிலையில், எஞ்சிய பார்லி கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்துள்ளார். ஏற்கனவே, சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தையும், கடந்த மாதம் எஸ்ஐஆர் குறித்த விவாதத்தையும் அவர் புறக்கணித்திருந்தார். தற்போது, சசி தரூர் 3வது முறையாக கூட்டத்தை தவிர்த்திருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.எஸ்ஐஆர் குறித்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர், பிரதமர் மோடி பங்கேற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரது பேச்சையும் சமூக வலைதளத்தில் புகழ்ந்து பதிவிட்டிருந்தார். இதுவும் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ganesan
டிச 12, 2025 19:58

இவரையும் விட்டுஎங்கள


Venugopal, S
டிச 12, 2025 18:16

தில்லு திராணி இருந்தால் அவரை கான் க்ராஸ் கட்சியை விட்டு நீக்க வேண்டும். முடியுமா? சும்மா இங்கே வந்து கதறல்...


RAMESH KUMAR R V
டிச 12, 2025 17:19

காங்கிரஸ் குடும்ப ஆட்சிக்கு எதிரானவர் தேசப்பற்று மிக்கவர்.


Vasan
டிச 12, 2025 16:13

Shri.Sashi Tharoor is Oppositions Opposition.


V Venkatachalam, Chennai-87
டிச 12, 2025 15:23

ராகுல் கான் பேச்சை கேட்க எங்களுக்கு எரிச்சல் வருகிறது. அப்படி இருக்கும் போது சசிக்கு வராமலா இருக்கும். அப்புடி இருந்தால் அது நியாயம்தானே.


Senthoora
டிச 12, 2025 16:35

அப்பா எதுக்கு காங்கிரஸில் இருக்கனும்.


Anand
டிச 12, 2025 18:57

//அப்ப எதுக்கு காங்கிரஸில் இருக்கனும்// காங்கிரஸ் ஒன்றும் இத்தாலி மாபியாக்கள் அப்பன் வீட்டு சொத்து அல்ல. வேண்டுமானால் அந்த மாபியாக்கள் காங்கிரஸை விட்டு தொலையலாம். நாடு உருப்படும்.


vivek
டிச 13, 2025 06:53

அதுக்கு தலைமைக்கு தைரியம் இல்லையே.....


Balasubramanian
டிச 12, 2025 15:17

வரவிருக்கும் கேரளா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு முதல்வராக வாய்ப்பு உண்டு! எத்தனை காலம் தான் எதிர் கட்சியில் ஈ ஓட்டுவது?


duruvasar
டிச 12, 2025 14:44

ராகுல் இப்படி வெளிநாட்டு வெள்ளந்தியாக இருக்கக்கூடாது. வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு எல்லா காங்கிரஸ் எம் பிக்களும் கட்சியில் இருக்கிறார்களா என்று பார்க்க கூட்டம் கூட்டியது தவறா கோபால்.


saravanan
டிச 12, 2025 14:22

he is a wise man...he likes old congres and he is loyal to that, but not every decision now they take and same with other party, if he find good he dares to appreciate without any hesitation. the one and only person I like and value in Congress. he is fit to be a congress president but unfortunately he is not "gandhi" family to be eligible for that post.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை