உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷிண்டே சிவசேனா தலைவரின் மகன் ஓட்டிய கார் மோதி பெண் பலி

ஷிண்டே சிவசேனா தலைவரின் மகன் ஓட்டிய கார் மோதி பெண் பலி

மும்பை: மும்பையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த தலைவர் ஒருவரின் மகன் ஓட்டிய கார் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மும்பையின் வோர்லி பகுதியில் இன்று(ஜூலை 07) காலை அதிவேகமாக சென்ற சொகுசு கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது. அதில் பயணித்த பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டார். அதில் படுகாயமடைந்த அந்த பெண் உயிரிழந்தார். காரை ஓட்டியவர் தப்பிச் சென்றார். போலீசார் விசாரணையில் காரை ஓட்டியது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் பல்கர் மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ஷா மகன், மிஹிர்ஷா என்பது தெரியவந்தது. இதனையடுத்து மிஹிர் ஷாவை தீவிரமாக தேடி வரும் போலீசார் ராஜேஷ் ஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Shankar
ஜூலை 07, 2024 22:25

தீவிரமாக தேடுங்கள் மக்களுக்காக கைது செய்யுங்கள் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் அங்கே அவர்கள் அரசியல்வாதிகள் ஆளும் கட்சிக்காரர்கள் என பயந்து கௌரவமாக விடுவித்து விடுவார்கள் ஜனநாய நாட்டின் நாடகம் இறுதியில் முடிந்துவிடும் இதுதாண்டா அறிவு மேதை அம்பேத்கர் லா பெருமையா சொல்லுங்க


Iniyan
ஜூலை 07, 2024 20:15

தீவீரமாக தேடுபர்கள் ஆனால் பிடிக்க மாட்டார்கள்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ